பெண்களுக்கு ஏற்படும் மிகவும் தொல்லைத் தரக்கூடிய நோய்களுள் முதன்மையானது பெரும்பாடு எனும் அதிக இரத்தம் சதா வெளியேறிக் கொண்டேயிருக்கும் நோயாகும். எத்தகைய மருந்துகளை அடிக்கடி சாப்பிட்டாலும் இத்தொல்லை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இதனால் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்து விடும். உடல் வெளுத்து இரத்த சோகையும் ஏற்படும்.
இத்தகைய பெரும்பாடு நீங்க எளிய முறை வைத்தியங்களைச் செய்து வர இத்தொல்லை நிரந்தரமாக குறைந்திடும். இதற்கு மருந்துகள் சாப்பிடும் பொழுது அதிக காரம், புளிப்பு அடங்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாதவிடாயின் போது இரத்த போக்கின் அளவு அளவிற்கு அதிகமாக இருந்தால் கரிய பகலித்தைச் சிறிது நீரில் நனைத்து கரைத்து பின்னர் கல் மண் இல்லாது சுத்தப்படுத்தி காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டு வர 6 – 7 நாட்களில் பெரும்பாடு முழுவதுமாக நீங்கும்.
சீரகம், வெங்காயம், கேரட், பச்சைக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து ஒரு எலுமிச்சை அளவு காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும்.
இரத்தப்போக்கு நிற்க வில்வ இலையுடன் வெங்காயத்தை சேர்த்து இடித்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெயில் சேர்த்து லேசாக காய்ச்சி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வர இரத்தப் போக்கு நிற்கும்.
தரைப்பசலை இலை, வெங்காயம், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து காலை மாலை சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும். சுத்தமான சந்தன அத்தர் 5 – 6 சொட்டு எடுத்து சூடான பால் விட்டு காலை மாலை குடித்து வரவும். பெரும்பாடு நீங்கும்.
அதிமதுரம் 20 கிராம் எடுத்து, இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கஷாயம் இறக்கி காலை மாலை தொடர்ந்து உள்ளுக்குச் சாப்பிட்டு வரவும் பெரும்பாடு நீங்கும்.
அத்திப்பட்டை நாவல் பட்டை, கருவேலம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணமாக வைத்துக் கொண்டு நாள் ஒன்றிற்கு மூன்று வேளை ஒரு ஸ்பூன் வீதம் உட்கொண்டு வர பெரும்பாடு நீங்கும்.
தொட்டால் சிணுங்கி ஒரு பிடி சீரகம் ஒரு ஸ்பூன், வெங்காயம் ஒன்று மூன்றையும் அரைத்து மோரில் கலந்து 2 வேளை உட்கொண்டு வர பெரும்பாடு நீங்கும்.
No comments:
Post a Comment