Tuesday, January 15, 2013

ஏற்காட்டில் 2வது பருவ மலர் கண்காட்சி துவக்கம்


சேலம், : சேலம் ஏற்காட்டில் நேற்று இரண்டாம் பருவ மலர் கண்காட்சி தொடங்கியது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகள் மலர் கண்காட்சியை கண்டுரசித்தனர். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளு குளு சுற்றுலாத்தலங்களில் கோடை விழா நடத்தப்படுவதோடு, அந்தந்த பருவ காலங்களுக்கு ஏற்ப கலைவிழாக்களும் நடத்தப்படுகிறது. ஆனால், ஏழைகளின் ஊட்டி என்று அழை க்கப்படும் ஏற்காட்டில் இது போன்ற விழாக்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் முதல் முறையாக ஏற்காட்டில் குளிர்காலத்தையொ ட்டி இரண்டாம் பருவ மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, 2ம் பருவ மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது.

சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொழுகொழு குழந்தைகள் போட்டி, குதிரை சவாரி நாய் கண்காட்சி, இசை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் சேலம் மாவட் டம் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் இருந்தே குவிந்தனர். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், நேற்று 2வது கொண்டை ஊசி வளைவு முதல் ஏற்காடு நகர் வரை எங்கு பார்த்தாலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

லேசான சாரல் மழையும் பெய்தது. இதனால், சுற்றுலா வந்தவர்களின் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தன. ஏற்காடு அண்ணா பூங்காவில் 2 ஆயிரம் பழங் களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. லில்லி, கார்நேசன், கிளாடியோலை, ஆரோம்லில்லி, டெலிகோலியம், ஜெர்பரா போன்ற வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியை, சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

No comments:

Post a Comment