பென்னாகரம், : விடுமுறை நாளான நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அனைவரும் காவிரி ஆற்றிலும், மெயின் அருவியிலும் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக சினிபால்ஸ்சில் குளிக்க பலர் ஆர்வம் காட்டினர். இதனால் அங்கு கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி ஒகேனக்கல்லில் நேற்று மீன்கள் விலை உயர்ந்தது. நேற்று நண்பகல் நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வந்தது.
No comments:
Post a Comment