Tuesday, January 15, 2013

Diabetes Ayurvedic Treatment Tamil


சர்க்கரை வியாதி புதிதாக வந்த வியாதியல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியர்களுக்கு தெரிந்த வியாதி. ஏன், உலகின் தொன்மையான வியாதிகளில் சர்க்கரை வியாதியும் ஒன்று. ஆயுர்வேதத்தில், சரகஸம்ஹிதையில் ‘ ப்ரமேஹா’ என்ற தலைப்பில், 20 சிறுநீர் கோளாறுகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்த இருபதில் “மதுமேஹா” என்று சர்க்கரை வியாதி குறிப்பிடப்படுகிறது.
சர்க்கரை வியாதி (நீரிழிவு நோய்), புற்றுநோய் அல்லது மாரடைப்பு போன்ற உயிர் கொல்லி நோயல்ல, அதை நோய் என்று சொல்வதை விட, உடலின் குறைபாடு என்றே கூறலாம். ஆனால் பல தொல்லைகளையும், வேதனைகளையும் தரும் ஒர் பெரிய, சிக்கலான குறைபாடு. இதை குணப்படுத்த முடியாது. இவ்வளவு வருடங்களாக நம்முடன் வாழ்ந்து வந்தும் இதற்கு பரிபூரண குணம் காணமுடியாமல் போவதிலிருந்தே இந்த நோயின் கடுமையை உணரலாம். ஆனால் தற்போதைய மருத்துவ கண்டுபிடிப்புகளால் இந்தக் குறைபாட்டை கட்டுபடுத்தலாம்.
நீங்கள் 40 வயதை தாண்டியவராக இருந்து, சாதாரண ஐ§ரத்திற்காக டாக்டரிடம் சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி “உங்களுக்கு” சுகர்” உண்டா, ஙி.றி. உண்டா” என்பது தான். நீங்கள் இல்லையென்றால், அவர் உங்களை ஏற இறங்க, செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த மனிதனை பார்ப்பது போல் பார்ப்பார்! “உடனே டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்” என்பார்.
அவ்வளவு சாதாரணமாகிவிட்டது சர்க்கரை வியாதி. இந்தியாதான் தற்போது அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள தேசம். இந்த புள்ளி விவரங்கள் திகைப்பூட்டுகின்றன. அதுவும் இளவயதினர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவது அதிகமாகிவிட்டது. சர்க்கரை வியாதியும் ஒர் “பரவும்” (ணிஜீவீபீமீனீவீநீ) வியாதியாகிவிட்டது. டயாபடீஸ் பற்றிய விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மனிதகுலத்திற்கு பெரும் சவாலான இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதனுடன் வாழ நினைத்தால் வாழலாம். எப்படி என்பதை வரும் பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம்.

No comments:

Post a Comment