திருவண்ணாமலை,: திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக சாத்தனூர் அணை திகழ்கிறது. இங்குள்ள அணை, பூங்கா, முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான குரங்குகள் அணைப்பகுதியில் சுற்றித்திரிந்தன. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பழங்கள், பைகளை அவை பறித்துக் கொண்டு ஓடி விடும். நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை சாத்தனூர் அணையில் அதிகரித்து வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து குரங்குகளை பிடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் சாத்தனூர் அணை பகுதியில் குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 150 குரங்குகள் பிடிபட்டன. அவற்றை அடர்ந் த காட்டுப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். மீதமுள்ள குரங்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

No comments:
Post a Comment