ஊட்டி,: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஊட்டி தயாராகி உள்ளது. ஓட்டல்கள், காட்டேஜ், ரிசாட்கள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக நீலகிரி சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாடுவதற்காக, ஊட்டியில் நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டல்களிலும் இரவில், ஆடல், பாடல், கேம்ப் பயர் நிகழ்ச்சிகள், சினிமா கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஓட்டல்கள், கடைகள், பூங்காக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் போன்ற வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் ரிசாட்கள் மற்றும் ஓட்டல்களும் புத்தாண்டிற்காக தயாராகி வருகின்றன. இங்கு நடக்கும் புத்தாண்டு விழாக்களில் கலந்துகொள்ள ஏராளமான வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் புக்கிங் செய்துள்ளனர். பெரும்பாலான ரிசாட்டுக்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் ஜன. 3ம் தேதி வரை அறைகள் கிடையாது.

No comments:
Post a Comment