பொள்ளாச்சி, :கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி, மே என இரண்டு கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. முதல் கட்டமாக புலிகள் கணக்கெடுப்பு பணி நாளை துவங்கி 6ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. வனச்சரகர், வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இப்பணி காரணமாக நாளை முதல் 6ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டாப்சிலிப், குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாது.
No comments:
Post a Comment