Tuesday, January 15, 2013

குமரி வள்ளுவர் சிலை 13வது ஆண்டு விழா


கன்னியாகுமரி,: கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. நேற்று இதன் 13வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையமும், குமரி மாவட்ட தமிழ் அமைப்புகளை சேர்ந்த அறிஞர்களும் சிறப்பு படகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றனர். அங்கு திருவள்ளுவர் சிலை காலடியில் மலர் தூவியும், மாலைகள் அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

விழாவில் சாமிதோப்பு பாலபிரஜாதிபதி அடிகளார், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் காளியப்பன், விவேகானந்த கேந்திர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், சாகித்ய அகா டமி விருது பெற்ற எழுத்தா ளர் பொன்னீலன், கன்னியாகுமரி எம்பி ஹெலன் டேவிட்சன், விஜயதாரணி எம்எல்ஏ, இந்து கல்லூரி தலைவர் ஆறுமுகம்பிள்ளை, வெள்ளாளர் கல்வி அறக்கட்டளை தலை வர் வள்ளிநாயகம் பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment