பொள்ளாச்சி,: ஆனைமலை புலிகள் காப்பக சுற்றுலா தலங்களில் பயணிகள் தம் அடிக்க கூடாது, சரக்கு கொண்டு வர கூடாது என பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், வால்பாறை, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனசரகங்கள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் தடை நீங்கியதால், தற்போது இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். டாப்சிலிப், குரங்கு அருவி, பரம்பிக்குளம், வால்பாறை, சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பஸ், கார், வேன்களை வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்புகின்றனர்.
வனத்தில் அத்துமீறலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கான விதிமுறைகள் குறித்து பொள்ளாச்சி, டாப்சிலிப் உள்ளிட்ட வனசரகங்களில் 35 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன. குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, அதிக கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ‘வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது. காட்டு பகுதிக்குள் புகைபிடிக்க கூடாது. மது கொண்டுவர கூடாது. அருவியில் ஒரு மணி நேரம் மட்டுமே குளிக்க வேண்டும்’ என்று பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்து பல பகுதிகளில் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment