Tuesday, January 15, 2013

கஞ்சா வியாபாரி கொலை சினிமா துணை நடிகரை பிடிக்க கும்மிடிப்பூண்டியில் வலை


தண்டையார்பேட்டை, : யானைக்கவுனி எடப்பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (25). கஞ்சா வியாபாரி. இவர் மீது செயின் பறிப்பு, கஞ்சா விற்றது உள்பட பல வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த ரஞ்சித் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த 31ம் தேதி நள்ளிரவு ரஞ்சித்தை 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கஞ்சா விற்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
புளியந்தோப்பு உதவி கமிஷனர் லோகநாதன், பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ரஞ்சித் கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சினிமா துணை நடிகர் சங்கர் மற்றும் அவரது கூட்டாளி தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கும்மிடிப் பூண்டி விரைந்துள்ளனர்.

No comments:

Post a Comment