உலக சுகாதார அமைப்பு (WHO) மூன்று விதமாக சர்க்கரை வியாதியை குறிப்பிடுகிறது. டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes). இவை மூன்றும் கணையத்தின் பீடா (Beta)செல்கள் தேவையான அளவு இன்சுலினை சுரக்க முடியாமல் போவதால் தான் உண்டாகும். இருந்தாலும் காரணங்கள் வித்யாசமாகும்.
பழைய பட்டியல் – நீரிழிவின் வகைகள்
1. டைப் 1 ( Type 1)
• இது இன்சுலின் சார்ந்த நிலை (Insulin dependent diabetes mellitus – IDDM).
2. டைப் 2 (Type 2)
• இது இன்சுலின் சாரா நிலை (Non – insulin dependent diabetes mellitus – NDDM ) .
3.கர்ப்ப கால நீரிழிவு (Gestational diabetes)
மேற்சொன்னவை உலக சுகாதார குழுமம் நிர்ணயித்த பழைய வகைகள்.
புதிய பட்டியல் – நீரிழிவின் வகைகள்
1. டைப் 1
நோய் பாதுகாப்பு சக்தியின் குறைபாடு Auto immune.
தானாக உண்டாகும்/ காரணமின்றி ஏற்படும் டயாபடீஸ் - Idiopathic
2. டைப் 2
முக்கியமாக இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படும் டயாபடீஸ்
முக்கியமாக இன்சுலின் சுரப்பதின் குறைபாடுகளால் வரும் டயாபடீஸ்.
3. கர்ப்ப கால டயாபடீஸ் (Gestational diabetes)
4. இதர வகைகள்
பிறவி கோளாறுகளால் பாதிக்கப்பட்ட கணைய பீடா (Beta) செல்களால் ஏற்படுவது.
இன்சுலின் எதிர்ப்பு, இன்சுலின் தவறாக செயல்படுவது இவற்றால் வரும் டயாபடீஸ்.
கணையத்தை பாதிக்கும் நோய்களால் வருவது. (கணைய டயாபடீஸ்)
என்டோ கிரினோபதியால் (குஷிங் சின்ட்ரோம்) உண்டாவது.
மருந்துகளால் உண்டாகும் டயாபடீஸ் (குளுகோ – கார்டிக் காய்ட்ஸ்) (Gluco corticoids)
தொற்று நோயால் உண்டாவது ( Congenital Rubella)
அபூர்வமான நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வரும் டயாபடீஸ்
இதர மரபணு கோளாறுகளால் வருவது ( Turner’s Syndrome)
குறிப்பு
இந்த புதிய பட்டியலை உலக சுகாதாரக் அமைப்பு (WHO) அறிவிக்க காரணம் பழைய பட்டியலில் உள்ள Insulin Dependent Diabetic Mellitus (IDDM), Non – Insulin Dependent Diabetic Mellitus (NIDDM) போன்ற குழப்பமான குறிப்பீடுகளை எடுப்பதற்காக. இப்போது இந்த பிரிவுகள் ஒவ்வொன்றையும் விவரமாக பார்ப்போம்.
1. டைப் 1
• உடலில் தானாகவே ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் (ஆடோ – இம்யூன்) கணைய பீடா செல்கள் அழிந்து விடுவதால் ஏற்படும் நீரிழிவு இது.
• இந்த டைப் டயாபடீஸீக்கு எந்த நிலையிலும் தேவையான சிகிச்சை இன்சுலின் ஊசி போடுவது தான். அடிக்கடி ரத்த குளுக்கோஸ் அளவை பரிசோதிப்பது அவசியம். வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
• இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளாவிட்டால், கேடோ அசிடோஸிஸ் (diabetic ketoacidosis) ஏற்பட்டு “கோமா” நிலைக்கு போக நேரிடும். இந்த டைப் நோயாளிகளுக்கு தான் சர்க்கரை நோயின் சகல பாதிப்புகளும் ஏற்படுகிறது.
• டைப் 1 (a) வகைகள் மேலும் சில ஆடோ – இம்யூன் வியாதிகளுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். அவை கிரேவ்ஸ் வியாதி (Graves diseases), தைராய்டிடைஸ் (Thyroiditis), ஆடோ இம்யூன் அடிசன்ஸ் வியாதி ( Auto immune Addisons disease), ஓவரிகளின் தோல்வி(Ovarian failure), சோகை.
• இந்த வகை நோய் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பாலும் வரும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வரும் சர்க்கரை வியாதிக்கு வித்யாசங்கள் உண்டு. மொத்த டயாபடீஸ் நோயாளிகளில் 5 விழுக்காடு நோயாளிகள் டைப் 1 னால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை வியாதி பிறந்த குழந்தைக்கும் வரலாம். சிறுவர்களுக்கு வருவதால் இது ஜுவைனல் டயாபடிஸ் (Juvenile diabetes) என்றும் கூறப்படுகிறது.
• டைப் 1 நோயாளிகளுக்கு இருக்க வேண்டிய ரத்த சர்க்கரை அளவு 120 மிகி / டெ.லி. அடிக்கடி தாழ் நிலை சர்க்கரை குறைவை அடைபவர்களுக்கு டாக்டர்கள் 140 – 150 மி.கி / டெ.லி. வரை கூட இருக்கலாம் என்கிறார்கள். 200 மி.கி. / டெ.லி. அளவுக்கு மேல் போனால் அடிக்கடி சிறுநீர் போவது, உடல் உபாதைகள் தோன்றலாம். 300 க்கு மேல் போனால் டாக்டரை அணுக வேண்டிய நிலை. தாழ் நிலைக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
• மனச்சோர்வு அடையாமல் உரிய சிகிச்சை மேற்கொண்டால், நோயாளிகள் நார்மல் வாழ்க்கை வாழலாம். விழிப்புணர்வு, சரியான பராமரிப்பு, சரியான அளவு இன்சுலினை செலுத்திக் கொள்வது, வாழ்வு முறை மாற்றங்கள் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
2. டைப் 2 ( Non – insulin dependent diabetes mellitus – NDDM )
• இது இன்சுலின் சாராத நிலை
• இது 30 வயதுக்கு மேற்பட்டவர்களை, நடுத்தர வயதினரை பாதிக்கும்.
• பழைய முறையில், இன்சுலின் சாராத பிரிவு என்று குறிப்பிடப் பட்டது. இந்த டைப் 2 தான் அதிகமாக காணப்படும் நீரிழிவு வியாதி. சேதப்பட்ட பீடா’ (Beta) செல்கள், இன்சுலின் ரிசெப்டர்களுக்கு (Receptors) எதிர்ப்பு தெரிவிக்கும் உடல் நிலை, மற்றும் கல்லீரல் சர்க்கரை உற்பத்தி அதிகமாதல் போன்றவை இந்த டைப்பின் அம்சங்கள். இந்த டைப் 2 வை சில டாக்டர்கள் இரண்டு வகையாக – பருமனானவர்கள் மற்றும் பருமனில்லாதவர்கள் – என்று பிரிக்கின்றனர்.
• உடல் பருமன் அதிகம் உள்ளவர்களில் 55 சதவிகிதத்தினருக்கு இந்த டைப் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. மொத்த சர்க்கரை நோயாளிகளில் 95% டைப் 2 நோய்க்கு ஆளாகின்றனர். இந்த உடல் பருமன் இடுப்பை சுற்றி, “டயர்” (Tyre) போல் அடிவயிறு இருப்பவர்களுக்கு டைப் – 2 வரும் சாத்ய கூறுகள் அதிகம். அதுவும் வயதும் ஆகி, குண்டாகவும் இருந்தால் இதன் தாக்கம் ஏற்படுவது சகஜம். சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டால் கணையத்தை ஊக்குவிக்கும் பல மருந்துகள், ஏற்பாடுகளால் சரிவர சிகிச்சை மேற்கொள்வது சுலபமாகும். இன்சுலின் ஊசி தேவைப்படாமல் போகலாம். ஆனால் டைப் – 2 அறிகுறிகள் தென்பட நாளாகும்.
• குறைந்த இன்சுலின் சுரப்பு, இன்சுலினை புறக்கணிக்கும் தன்மை மற்றும் இன்சுலின் receptor களின் குறைபாடு என்ற மூன்று வித விஷயங்களின் சேர்க்கையால் டைப் – 2 ஏற்படுகிறது.
• உடற்பயிற்சி இல்லாத, உடலுழைப்பும் இல்லாத சோம்பல் வாழ்க்கை வாழ்பவர்கள் இந்த டைப் – 2 க்கு ஆளாவார்கள்.
• டைப் 2 டயாபடீஸிக்கு பரம்பரை ஒரு வலுவான காரணம். இதை விரிவாக பின்னால் பார்ப்போம்.
• அபூர்வமாக டைப் 2 வியாதியஸ்தர்களுக்கு உடல் நீர்ச்சத்து குறை நிலை (dehydration) தீவிரமாக உண்டாகும்.
• டைப் – 2 டயாபடீஸில் அறிகுறிகள் பல வருடங்களுக்கு தென்படாமல் போகும். இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.
3. கர்ப்ப கால நீரிழிவு (Gestational diabetes)
இது ஒரளவு டைப் – 2 நீரிழிவை போன்றது.
• கர்ப்ப ஹார்மோன்களால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும்.
• குழந்தை பிறந்த உடன் இந்த நீரிழிவு மறைந்து விடும். தற்காலிகமான நிலை தான் இது.
• தற்காலிகமாக இருந்தால் கூட இதற்கு சிகிச்சை செய்யா விட்டால் தாயாருக்கும், கருவுக்கும் ஆரோக்கிய குறைவு ஏற்படும். அதிக உடல் எடையுடன் ( 4 கிலோக்கு மேல்) குண்டான குழந்தை பிறக்கும். பல குறைபாடுகள் – இதய நோய், நரம்பு மண்டல பாதிப்பு – இவை பிறவி நோய்களாக – குழந்தையை பாதிக்கும். அதிக இன்சுலின், பித்தநீர், இவை பல சிக்கல்களை உண்டாக்கும்.
•கர்ப்பகால சர்க்கரை நோய் குறை பிரசவம் நேரிட காரணமாகலாம்.
• குழந்தை இறந்து பிறக்கக் கூடும். தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
• பிறந்த குழந்தை பிற்காலத்தில் நீரிழிவு நோயாளியாக வாய்ப்புகள் அதிகம்.
• இதனால் கர்ப்பிணிப் பெண்கள், பிரசவம் வரை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
3.இதர வகைகள்4 (a) பிரிவில் உள்ள பிறவிக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட கணையத்தால் ஏற்படும் டயாபடீஸ், 25 வயதிலேருந்து உண்டாகலாம். இந்த டைப் இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் வரும். ஆனால் இன்சுலினிலேயே குறைகள், கெட்டு போன இன்சுலின் இவற்றால் வருவது டைப் 4(b).
4. நாம் புரிந்து கொள்ள வேண்டியது – பிறவிக் கோளாறுகள் இரு வகையில் கணையத்தை தாக்கும். ஒன்று நல்ல, சுத்தமான இன்சுலினை கணையம் சுரந்தாலும், அளவு போதாமல் போகும். மற்றொன்று இன்சுலின் ஹார்மோன் கெட்டிருக்கலாம்.
5. 4 (c) - புற்றுநோய் தவிர கணையத்தை முற்றிலும் முடக்கும் வியாதிகளால் வரும் டயாபடீஸ் 4 (c) டைப். இது குறைவான ஊட்டச்சத்தின் காரணமாக ஏற்படலாம் என்று முன்பு கருதப்பட்டது. இந்த கருத்து கைவிடப்பட்டு இப்போது நாளமுள்ள சுரப்பிகள்(Exocrine) , கணைய (Pancreas) நோய்கள் தான் காரணம் என்று மாற்றப்படுகிறது. கணையத்தில் கற்கள், ஃபைராய்ட்ஸ் இருப்பதை அல்ட்ரா ஸோனோகிராஃபி, CAT ஸ்கான் மற்றும் MRI Scan இவைகளால் கண்டுபிடித்து விடலாம்.
6. டைப் 4 (d) – பல ஹார்மோன்கள் – வளர்ச்சி ஹார்மோன், கார்டிஸோன் (Cortisone) குளுகோஜன் (Glucagon) - இன்சுலினுக்கு எதிரிகளாகலாம். இவை அதிகம் சுரந்து டயாபடீஸை உண்டாக்கலாம். இந்த டைப் டயாபடீஸ், அதிகம் சுரக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தினால், குணமாகி விடும்.
7. டைப் 4 (e) – மருந்துகளால் ஏற்படும் நீரிழிவு வியாதி. குளுகோகோர்டி காய்ட்ஸ் (Glucocorticoids). சிறுநீர் போக உதவும் தியாஸைட் டையூரிடிக்ஸ் (Thiazide diurectis). பினெ டாய்சின் (Phenetoyin) போன்ற பல மருந்துகள் டயாபடீஸை ஏற்படுத்தும்.
8. டைப் 4 (f) - ரூபெல்லா, அடினோ வைரஸ், ஸைடோமெகலோ வைரஸ் போன்றவற்றாலும் வைரஸ் தொற்றால் வரும் மம்ஸ் (Mumps) போன்றவற்றாலும் கணைய பீடா செல்களை பாதித்து டயாபடீஸ் வர காரணமாகலாம்.
9. டைப் 4(g) Stiff man’s syndrome (உடல் தசைகள் விறைத்துப் போய் ‘கட்டை’ போல் கெட்டியாவது) போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள், டயாபடீஸால் தாக்கப்படுவார்கள்.
10. டைப் 4 (h) - மரபணு கோளாறுகள் (Down’s syndrome, Turner’s syndrome) இவைகளாலும் டயாபடீஸ் தோன்றலாம்.
No comments:
Post a Comment