Tuesday, January 15, 2013

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குளிர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


சேலம், : ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாதத்தில் கோடைவிழா கொண்டாடப்படும் போது, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிவார்கள். தற்போது டிசம்பர் மாத குளிரை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக நள்ளிரவு முதல் காலை 11 மணி வரை கடும் குளிர் நிலவுகிறது.

அதிகாலையில் பனிப்பொழிவும் உள்ளது. நேற்று, மதியம் 12 மணி வரை இதமான குளிர் இருந் தது. மிக உயரமான பகுதியான சேர்வராயன் கோயில் பகுதியில் அதிகளவு குளிர் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து சென்றனர். மோட்டார் சைக்கிள், கார்களில் வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்திருப்பதாக சோதனைச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று ஏராளமானோர் கார்களில் ஏற்காட்டுக்கு வந்தனர். பயணிகள் வரத்து இன்னும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment