இந்த யுகத்து யுவதிகளின் தலையாய பிரச்சனை கருப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள். இதை பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் பாலிசிஸ்டிக் ஓவரி என்பார்கள்.
பிசிஓஎஸ் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மாதவிடாய் சுழற்சி, குழந்தை பெறும் திறன், ஹார்மோன்கள், இன்சுலின் உற்பத்தி, இதயம், ரத்த நாளங்கள், உடல் தோற்றம் முதலியவற்றை பிசிஓஎஸ் பாதிக்கும். பிசிஓஎஸ் உள்ள பெண்களின் குணாதிசயங்கள்.
பெண்களின் உடலில் சிறிதளவே உள்ள ஆண் ஹார்மோன் அதிகமாகி பெண்களுக்கு ஆண்மை தன்மை ஏற்படும்.
மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும் இல்லை நின்று விடும்.
கருப்பை வீக்கமடையும்.
தாய்மை அடையும் வயதில் உள்ள பெண்களில் 5 லிருந்து 10 சதவிதம்
வரை பிசிஓஎஸ் தாக்குகிறது. இதனால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை உண்டாகலாம்.
சினை பைகள், கருப்பையின் இரு பக்கங்களில் உள்ள சிறு அவயங்கள். இவற்றில் ஃபாலிக்கில்ஸ் எனப்படும் நீர் நிறைந்த சிறு உறைகளில் சினை முட்டைகள் இருக்கும். மாதா மாதம் கிட்டத்தட்ட 20 சினை முட்டைகள் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று தான் பலவானாக, வலிமை மிக்கதாக இருக்கும். முட்டை முதிர்ச்சி அடைந்ததும் சினைப்பை வெடித்து முட்டையை வெளியே விடுகிறது. முட்டை கருக்குழாய்கள் மூலம் வெளிச் சென்று ஆண் விந்துவுடன் இணைந்து, கரு உருவாகிறது.
பிசிஓஎஸ் உள்ள பெண்களில், சினை முட்டைகன் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக கட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும். போதாக்குறைக்கு, நீர்க் கட்டிகள் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனால் ஒவியுலேசன் தடைப்படும்.
பிசிஓஎஸ்ன் அறிகுறிகள்
மாதவிடாய் சுழற்சி பாதிப்பு, மாதவிடாயே வராமல் போதல், ஏறுமாறான உதிரப்போக்கு.
மலட்டுத்தன்மை.
பெண்களின் முகம், மார்பகம், வயிறு, முதுகு, கட்டைவிரல் முதலிய இடங்களில் அசாதாரணமாக முடி வளர்தல்.
இடுப்பு வலி.
உடல் எடை கூடுதல்.
டைப் 2 நீரிழிவு.
அதிக அளவு கொலஸ்ட்ரால்.
உயர் இரத்த அழுத்தம்.
ஆண்களைப் போல், வழுக்கை ஏற்படுதல்.
கழுத்து, கைகள், மார்பகங்களில் கருநிற திட்டுக்கள் தோன்றுதல்.
தூங்கும் போது குறட்டை விடுதல்.
மூச்சு விடுதலில் சிரமம்.
காரணங்கள்
சரியான காரணங்கள் தெரியவில்லை. பரம்பரை காரணமாகலாம் தாயிடமிருந்து மகளுக்கு வரும்.
அதிஸ்தூலம் – அதிக உடல் எடை.
கருத்தரிப்பு விஷயங்களை ஊக்குவிப்பது பிட்யூடரி சுரக்கும். அப்படியே நீர்கட்டிகளாக தங்கி விடுகின்றன.
அட்ரீனலின் சுரப்பிகள் கூட அதிக ஆன்ட்ரோஜன்களை (ஆண் ஹார்மோன்) சுரக்கும். இதனாலும் பிசிஓஎஸ் ஏற்படும்.
ரத்தத்தில் அதிக அளவு இன்சுலின் இருந்தால்.
பரிசோதனை
பிசிஓஎஸ் இருப்பதை கண்டறிய சிறந்த பரிசோதனை அல்டரா சவுண்ட். ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் மற்றும் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகள் பரிசீலிக்கப்படும். ஆண்கள் ஹார்மோன்களின் அளவு அதிகமாக தெரிந்தால், பிசிஓஎஸ் இருப்பது உறுதியாகும். உடலில் ஏற்படும் அசாதாரணமான முடிவளர்ச்சிகளும் கவனிக்கப்படும். அல்ட்ரா – சவுண்ட் முறையினால் இடுப்பு பாகங்கள் சோதிக்கப்படும். சினைப்பைகளின் வீக்கம், சிறிய நீர்க்கட்டிகள் முதலியன தென்படும். வஜீனல் அல்ட்ரா – சவுண்டாலும், எண்டோமெட்ரியம் மற்றும் சினைப்பைகள் பார்க்கப்படும்.
சிகிச்சை
பிசிஓஎஸ் முற்றிலும் குணப்படுத்த முடியாத பிரச்சனை. அதனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டால் மட்டுமே சிகிச்சைகள் தேவைப்படும்.
குடும்ப தடை மாத்திரைகள் பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிப்படுத்தும். ஆண் ஹார்மோன் சுரப்பை குறைக்கும். முகப் பருக்களைக் கூட குறைக்கும். ஆனால் நீர்க்கட்டிகளை குணமாக்க (அகற்ற) முடியாது. இந்த மாத்திரைகளை நிறுத்தினால், மாதவிடாய் சுழற்சி மறுபடியும் பாதிக்கப்படும்.
டைப் – 2 நீரிழிவுக்காக கொடுக்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் நீர்க்கட்டிகைள கட்டுப்படுத்தும். அசாதாரணமான முடி வளர்ச்சிகளை கட்டுப்படுத்தும். சில மாதங்களில், ஒவியுலேசன் ஏற்படவும் உதவும்.
மலட்டுத்தன்மையை போக்கி, கருத்தரிக்க உதவும் மருந்துகளும் பிசிஓஎஸ்ஐ கட்டுப்படுத்தும்.
அதீத உடல் பருமன் பிசிஓஎஸ் வர காரணங்களில் ஒன்று. அதனால் உடல் எடையை சரியான அளவில் வைப்பது அவசியம்.
ஆயுர்வேதம்
எல்லாவித கர்ப்பாசய கோளாறுகள், பெண்களின் பெரும்பாடுகள் முதலியவற்றுக்கு ஆயுர்வேதத்தில் நல்ல மருந்துகள், மெட்பார்மின் மருந்துக்கு இணையான ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. ஆயுர்வேத மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படாது. அசோகாரிஷ்டம், லோத்ராவை அடிப்படையாக கொண்ட மருந்துகள், போன்ற பல மருந்துகள் கிடைக்கின்றன. பிசிஓஎஸ் உண்டாக்கும் முகப்பரு, தகாத இடங்களில் முடி வளர்தல், இன்சுலின் எதிர்ப்பு, வழுக்கை, அபரிமித ஆண் ஹார்மோன் சுரப்பு இவற்றையெல்லாம் குணமாக்கவும் ஆயுர்வேதத்தில் சிறப்பான மருந்துகள் கிடைக்கின்றன.
No comments:
Post a Comment