Tuesday, January 15, 2013

மேற்கு தொடர்ச்சி மலையில் பறவை கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்த திட்டம்


திருவில்லிபுத்தூர், : மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை ஆண்டுதோறும் நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு யானை, மான், சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இங்கு வன விலங்கு கணக்கெடுப்பு நடக்கும். கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்போது, வன விலங்குகள் தவிர, பல ரக பறவைகள் ஏராளமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இங்குள்ள பறவைகளையும் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சில வாரங்களுக்கு முன் விருதுநகர் மாவட்ட வனப்பகுதி முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. வனத்துறையினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பறவையின ஆய்வாளர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடந்த இந்தப் பணியின் மூலம், பல புதிய ரக பறவைகள் இந்த வனப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எதிர்பார்க்காத அளவுக்கு இங்கு 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வசிக்கின்றன. வசிக்க ஏற்ற சூழல், இரை மற்றும் குடிநீர் கிடைப்பதால், அவை இப்பகுதியை தங்கள் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கின்றன. வனவிலங்கு கணக்கெடுப்பு போல, பறவைகளையும் இனி ஆண்டுதோறும் கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருக்கிறோம்,‘‘ என்றனர்.திருவில்லிபுத்தூர், ஜன. 2: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை ஆண்டுதோறும் நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு யானை, மான், சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இங்கு வன விலங்கு கணக்கெடுப்பு நடக்கும். கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்போது, வன விலங்குகள் தவிர, பல ரக பறவைகள் ஏராளமாக இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இங்குள்ள பறவைகளையும் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சில வாரங்களுக்கு முன் விருதுநகர் மாவட்ட வனப்பகுதி முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

வனத்துறையினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பறவையின ஆய்வாளர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடந்த இந்தப் பணியின் மூலம், பல புதிய ரக பறவைகள் இந்த வனப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எதிர்பார்க்காத அளவுக்கு இங்கு 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வசிக்கின்றன. வசிக்க ஏற்ற சூழல், இரை மற்றும் குடிநீர் கிடைப்பதால், அவை இப்பகுதியை தங்கள் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கின்றன. வனவிலங்கு கணக்கெடுப்பு போல, பறவைகளையும் இனி ஆண்டுதோறும் கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருக்கிறோம்,‘‘ என்றனர்.

No comments:

Post a Comment