Tuesday, January 15, 2013

தேனிலவு தம்பதிகள் ஊட்டியில் குவிகின்றனர்


ஊட்டி,:தேனிலவு தம்பதிகள் ஊட்டியில் குவிகின்றனர். ஊட்டியில் கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2வது சீசன். இருப்பினும், நவம்பரிலேயே உறைபனி பொழிவு துவங்கிவிட்டது. ஊட்டிக்கு வழக்கமாக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. அதேசமயம், கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த தேனிலவு தம்பதிகள் இந்த காலநிலையை அனுபவிக்க அதிகளவில் வருகின்றனர். தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களில் தேனிலவு தம்பதிகளை காண முடிகிறது.

உறைபனி பொழிவை ரசிப்பதற்கென்றே வரும் சுற்றுலா பயணிகளும் உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். பிப்ரவரி வரை பனிப்பொழிவு காணப்படும். அதுவரை தேனிலவு தம்பதிகளின் வருகை அதிகளவில் காணப்படும். மார்ச் முதல் கோடை சீசன் துவங்கிவிடும். இதற்காக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவில் மலர் நாற்று நடவு உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment