Tuesday, January 15, 2013

பிட்யூடரி தரும் ப்ரோலாக்டின் ஹார்மோன்


உடலுள்ள சுரப்பிகளில் தலையானது பிட்யூட்டரி. மூளையில் அடிபாகத்தில் உள்ளது. இது சுரக்கும் ப்ரோலாக்டின் ஹார்மோன், சாதாரணமாக குறைந்த அளவில், பெண்களின் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் கர்ப்பமடைந்தால் இதன் சுரப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது.
ப்ரோலாக்டின் ஆண், பெண் இரு பாலர்களிடம் காணப்படுகிறது. இதன் முக்கிய பணி கர்ப்பிணி பெண்களின் தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவது. கர்ப்பிணிகளின் மார்பகத்தின் பால் சுரக்கும் சுரப்பிகளை ப்ரோலாக்டின் உப்ப வைத்து பெரிதாக்குகிறது.
கர்ப்ப காலத்தின் போது ப்ரோலாக்டின் பிட்யூடரியில் மட்டுமன்றி மார்பக திசுக்களிலும், கர்பப்பை ஈரமான சுவர்களிலும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும் மூளை, பிட்யூட்டரியை, ப்ரோலாக்டினை ரிலீஸ் செய்ய ஆணையிடும்.
ப்ரோலாக்டினின் செயல்பாடுகள்
கர்ப்பிணிகளின் தாய்ப்பால் சுரப்பை உண்டாக்குகிறது.
சில மகப்பேறுகளில், பிறந்த குழந்தைகள், ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, ஒரு பால் போன்ற திரவத்தை மார்பகங்களிலிருந்து சுரக்கின்றன. ப்ரோலாக்டின் தாயில் உடலில் சுற்றிக் கொண்டு இருப்பது தான் இதற்கு காரணமாகும்.
ப்ரோலாக்டின், உடலுறவுக்குப் பின் ஏற்படும் திருப்தியை தருவதில் உதவுகிறது. பாலுணர்வை தூண்டும் டோபமைன் அளவை குறைக்கிறது. இந்த செயல்பாடு ப்ரோலாக்டின் சரியான அளவில் இருந்தால் தான் நடக்கும். ப்ரோலாக்டின் அதிகமானால் ஆண்மைக் குறைவு ஏற்படும்.
ப்ரோலாக்டின் பெண்களின் ஹார்மோன் எஸ்ட்ரோஜனையும், ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளையும் குறைக்க வல்லது.
ப்ரோலாக்டினும் இதர ஹார்மோன்களும்
டோபாமின் எனும் நியூரோ டிரான்ஸ்மிட்டர் ப்ரோலாக்டின் சுரப்பதை தடுக்கும்.
செரோடோனின் மற்றும் தைராயிடு ஹார்மோன்கள் ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
கர்ப்ப காலத்தில்
இந்த சமயத்தில் அதிகமாகும் பெண் ஹார்மோன் எஸ்ட்ரோஜன், ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் குழந்தை பிறந்தவுடன் தரவேண்டிய தாய்ப்பால் உற்பத்தியை ப்ரோலாக்டின் தயாராக வைக்க உதவுகிறது.
பிரசவத்திற்கு பின்
பிறந்த குழந்தை தாய்பாலை பருகும் போது, ப்ரோலாக்டின் உற்பத்தி மேலும் தூண்டப்படுகிறது. அடுத்த பால் கொடுக்கும் வேளைக்கு தயாராக பால் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
ப்ரோலாக்டின் குறைபாடு
சில அபுர்வ கோளாறுகளினால், பிட்யூடரியின் இதர ஹார்மோன்களின் குறைபாட்டினால், ப்ரோலாக்டின் சுரப்பு குறையலாம். இதனால் பெண்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும். ஆண்களுக்கு ப்ரோலாக்டின் குறைபாட்டால் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
ப்ரோலாக்டினும், மலட்டுத்தன்மையும்
குழந்தைகளுக்கு பாலூட்டும் காலத்தில், பெண்கள் மறுபடியும் கர்ப்பமுறும் வாய்ப்புகள் குறைவு. இதன் காரணம் ப்ரோலாக்டின் தான். தாய்பால் சுரப்பை மட்டுமில்லாமல், பெண்களின் சினைமுட்டை உற்பத்தி, ளிஸ்uறீணீtவீஷீஸீ மற்றும் மாதவிடாய் சுழற்சியையும் ப்ரோலாக்டின் கன்ட்ரோல் செய்கிறது. ரத்தத்தின் ப்ரோலாக்டின் அளவு அதிகமானால் ஒவியுலேசன் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைகிறது.

ப்ரோலாக்டின் பாதிப்புகள்
அசாதாரண, அபரிமிதமான தாய்ப்பால் உற்பத்தி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும், பால் உற்பத்தி தொடருவது.
அசாதாரணமாக, மார்பகங்கள் வீங்கி, பெருத்து விடுதல். மார்பகங்கள் நலிந்து விடுதல், வலி ஏற்படுதல்.
ஏறுமாறான மாதவிடாய் சுழற்சி.
மலட்டுத்தன்மை, உடலுறவில் இச்சையின்மை.
கண் பாதிப்புகள்.
ப்ரோலாக்டின் அளவை ரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தைராய்டு வியாதிகள், பிசிஒஎஸ் எனப்படும் பெண்களின் பாதிப்பு, சில மருந்துகளின் உபயோகம் முதலியன ப்ரோலாக்டின் அளவுகளை அதிகமாக்கலாம்.

No comments:

Post a Comment