Tuesday, January 15, 2013

ஆயுர்வேத மூலிகைகள், தைலங்கள்


பிருங்கராஜ் (கரிசிலாங்கண்ணி)
முடியின் கருமையை காப்பாற்றும் கீரைமூலிகை பிருங்கராஜ். இதை பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத தைலங்களில் பயன்படுத்திவரப்படுகிறது.
வல்லாரை (மண்டூக பரணி)
ஞாபகசக்தியை ஊக்குவிக்கும் இந்த மூலிகை, கூந்தல் தைலத்தில்
தேங்காய் அல்லது நல்லெண்ணையுடன் தயாரிக்கப்படுகிறது. மன அமைதியையும், நல்ல தூக்கத்தை கொடுப்பது மட்டுமில்லாமல், மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கும். முடி ஆரோக்கியத்தை காப்பாற்றும்.
மருதோன்றி (ஹென்னா)
உடலையும், கேசக்கால்களையும் குளிர்ச்சியாக வைக்கிறது. இது தான்
பெண்கள் உள்ளங்கை விரல்களில் ஆசையாக இட்டுக் கொள்ளும் மருதாணி – மெஹந்தி. நல்ல மணமுள்ளது மருதோன்றி.
தான்றிக்காய் (பஹீரா)
முடிஉதிர்வதை தடுத்து நிறுத்துகிறது. முடிக்கால்களை பலப்படுத்தும்.
நெல்லிக்காய் (ஆம்லா)
விட்டமின் சி நிறைந்தது நெல்லிக்கனி. ஆயுளை அதிகப்படுத்துவதற்காக
ஒளவையாரிடம் அதியமான் கொடுத்த நெல்லிக்கனி. உலர்ந்த நெல்லிக்கனியில் உள்ள டேனின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மஞ்ஜிட்டி (மஞ்ஜிட்டி)
மஞ்ஜிட்டியின் வேர், சரும நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகளில்
இடம் பெறுகிறது. சர்மமும், முடியும் இணைந்து வாழ்வதால், மஞ்ஜிட்டியால் முடியும் பயனடைகிறது. கூந்தலை ஆரோக்கியமாக வைக்க மஞ்ஜிட்டி உதவுகிறது.
பூவரசு
டானிக். தலை மண்டையோட்டை நோய்களை குணப்படுத்தும்.
கருப்பு தாமர் – முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கோவைக்காய் – சர்மத்தையும், மண்டை தோலையும் ஆரோக்கியமாக வைக்கும்.
புங்கு (கரஞ்சா) – தலை மண்டை தோல் தொற்று நோய்களையும் அரிப்பையும் கண்டிக்கும்.
கீழ்கண்ட மூலிகைகளின் வேர் இவற்றின் நறுமணத்திற்காகவும், நோய் எதிர்ப்பு சந்திக்காகவும் மற்றும் கிருமி, பூஞ்சனம், பேக்டீரியா இவை தாக்குதலிருந்து,
தலை முடிகளை காப்பாற்றவும் ஆயுர்வேத தைலங்களில் சேர்க்கப்படுகின்றன. வெட்டிவேர் – (உஷிரா, கஸ்), கோரை (முஸ்தா) சீமைக்கிச்சடி கிழங்கு, ஜடமான்சி, ரோஜ இதழ்.
தவிர புதினா பூக்களும், கற்பூரமும், வாசனைக்காகவும், பொடுகு, பேனை ஒழிக்கவும் ஆயுர்வேத கூந்தல் தைலங்களில் பயன்படுகின்றன.
துளசி – கிருமிகளையும், பேக்டீரியாக்களையும் அழிக்கும்.
கூந்தல் தைலங்கள்
இயந்திரங்களுக்கு உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணை, கீரீஸ் போடுவது போல, சர்மத்திற்கும், முடிக்கும் எண்ணை தேவை. நம் நாட்டில் தலைக்கு தடவ தேங்காய் எண்ணை பெரும்பாலும் பயன்படுகிறது. கூந்தல் பிரச்சனைகள் ஏற்படாமல் வருமுன்காக்க ஆயுர்வேத மூலிகைகள் கலந்த தைலங்களை பயன்படுத்தினால், கூந்தல் மட்டுமல்ல – உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கீழே சில தைலங்கள் தயாரிக்கும் விவரங்கள் தரப்படுகின்றன.
கூந்தல் பராமரிப்பில் மூலிகைகளின் பங்கு
அவுரி இலை – முடிவளரும்
மருதாணி இலை – கறுமை பெறும்
கற்றாழை – அரிப்பு புண் மறையும்
நெல்லி – கறுமை / குளிர்ச்சி
கடுக்காய் – உதிர்தல் குறையும்
முட்டை வெள்ளைக்கரு – புரத சத்து
ஆலிவ் எண்ணெய் – வறட்சி நீங்கும்
சீயக்காய் – பிசுக்கை போக்கும்
துளசி – கறுமை தரும்
வல்லாரை – அரிப்பை நீக்கும்
பூவரசு – புண் ஆற்றும்
முடக்கத்தான் – முடி வளரும்
கரிசலாங்கண்ணி – மெருகு கூடும்
தேங்காய் பால் – உதிர்வது குறையும்
எலுமிச்சம் பழம் – வேர்க்கால் பலம் பெறும்.
பூலாங்கிழங்கு – வலு தரும்
ஆடு தின்னாப் பாலை – புழு வெட்டை குணமாக்கும்
மஞ்சிட்டா – உதிர்வது கட்டுப்படும்.
கோரைக்கிழங்கு – புதிய முடி வளரும்.
ஆயுர்வேத மூலிகை மருத்துவ முறையில் இவை தவிர எண்ணற்ற மூலிகைகள் கூந்தல் பராமரிப்பிற்காக உள்ளன. பாரம்பரிய முறையில் அவரவர்களுடைய அனுபவ முறையில் மூலிகைகளை காய்ச்சி தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன.
நீலி பிருங்காதி தைலம்
நீலி பிருங்காதி தைலம் பழமையான, கூந்தல் வளம் தரும் அற்புத தைலம்.
தேவையானவை
நல்லெண்ணெய்
(அ) தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர்
அவரி இலை சாறு – 150
நெல்லிக்காய் சாறு – 150 மி.லி
முடக்கத்தான் சாறு – 150 மிலி
கரிசாலை சாறு – 150 மிலி
ஆட்டுப்பால் – 150 மிலி
பசும்பால் – 150 மிலி.
எருமைப்பால் – 150 மிலி
தேவையானவை
அதிமதுரம் – 5 கிராம்
அஞ்சனக்கல் – 5 கிராம்
குண்டுமணி – 5 கிராம்
இரும்புப் பொடி – 5 கிராம்
மாம் பருப்பு – 8 கிராம்
தாணிக்காய் தோல் – 8 கிராம்,
ஏ-யில் உள்ளவற்றை இரும்புச்சட்டியிலிட்டு காய்ச்சவும் பி-யில் உள்ளவற்றை மை போல் அரைத்து அந்த விழுதையும் இரும்புச்சட்டியில் இட்டு சுண்டக் காய்ச்சினால் நீர் சுண்டி தைலம் பிரியத் துவங்கும், நெருப்பைக் குறைத்து நன்கு காய்ச்சினால் தைலம் தனியாகவும் சக்கை தனியாகவும் பிரிந்து விடும். தைலத்தை வடிகட்டி புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினசரி தடவி வர தலை குளிர்ச்சியாகவும், முடி கருமையாகவும் நன்கு ஆரோக்கியமாக வளரும். அதிகம் தேய்த்தால் சளி பிடிக்கும். குளிப்பதற்கு முன்பும் தடவி குளிக்கலாம். தொடர்ந்து உபயோகித்து வர பொடுகு நீங்கும், முடி உதிர்தல், கண் எரிச்சல், தலைவலி, பித்தக்கொதிப்பு, செம்பட்டைத்தலைமுடி தூக்கமின்மை போன்ற பற்பல பிரச்சனைகள் தீர்ந்து போகும்.
கரிசிலாங்கண்ணி தைலம்
தேவையானவை
கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 700 மி.லி.
சுத்தமான நல்லெண்ணை
அல்லது தேங்காய் எண்ணை – 350 மி.லி.
வெள்ளை கோஷ்டம் – 15 கிராம் சிறிது பாலில் அரைத்தது
செய்முறை
இவற்றையெல்லாம் கலந்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். மெழுகு பதம் வந்தவுடன் இறக்கி, வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணையை எண்ணை குளியலுக்கு (தலை, உடலில் தடவிக்கொண்டு) வாரம் இருமுறை பயன்படுத்தவும்.
பிருங்காமல தைலம்
தேவையானவை
கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 500 மி.லி.
நெல்லிக்காய் சாறு – 500 மி.லி.
நல்லெண்ணை – 500 மி.லி.
பசும் பால் – 1 லிட்டர்
அதிமதுர விழுது – 200 கிராம்
செய்முறை
கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய் இவற்றின் சாறு எடுக்க – தனிதனியாக இடித்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒவ்வொன்றிலிருந்து 500 மி.லி. சாறு எடுக்கவும். (நெல்லிக்காயை இடிக்கும் முன் விதைகளை எடுத்து விடவும்). கிடைத்த மொத்தம் 1 லிட்டர் சாற்றை 500 மி.லி. எண்ணையுடன் நீர் வற்றும் வரை காய்ச்சவும். எண்ணை பதம் கெட்டியாகும் போது, கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்க்கவும். நீர் வற்றகாய்ச்சி, கலவை கெட்டியாகும் போது அதிமதுர விழுதை சேர்க்கவும். கலவையின் பதம் “மணல்” போல் வரும் வரை காய்ச்சி, பின் இறக்கவும். மஸலின் துணியால், 2,3, முறை வடிகட்டி, உபயோகிக்கவும். இந்த தைலம் முடிக்கு பளபளப்பை தரும். முடி உதிர்தல், இளநரையை நிறுத்தும்.
தூர்வாதி தைலம்
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் – 1 கிலோ
அருகம் புல் (கல்கம் செய்ய) – 200 கிராம்
தேங்காய் எண்ணை – 1 லிட்டர்
செய்முறை
ஒரு கிலோ அருகம்புல்லை இடித்து 10 லிட்டர் நீரில், பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். காய்ச்சி எடுத்த கஷாயத்தில் 1 லிட்டர் தேங்காய் எண்ணையை கல்கமாக காய்ச்சி தைலபதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இந்த தைலம் முடி அழற்ச்சி, பொடுகு இவற்றை போக்கும்.
பிரம்மி தைலம்
தேவையான பொருட்கள்
சுத்தமான தேங்காய் எண்ணை – 16 பாகம்
வல்லாரை இலைச்சாறு – 16 பாகம்
கிராம்பு, ஏலக்காய் – 1 பாகம்
இவற்றை கலந்து நீர்வற்றும் வரை காய்ச்சி எடுத்து வைத்துக்
கொள்ளவும். இத்துடன் 16 பாகம் நெல்லிக்காய் சாற்றை சேர்த்துக் கொண்டால் நல்லது.
மூவிலைத் தைலம்
தேவையானவை
மருதாணி இலைச்சாறு – 25 கிராம்
பொன்னாங்கண்ணி இலைச்சாறு – 25 கிராம்
கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 5 கிராம்
நல்லெண்ணை – 50 கிராம்
செய்முறை
மேற்சொன்னவற்றை பெரிய பாத்திரத்தில் இட்டு, காய்ச்சவும்.

No comments:

Post a Comment