Tuesday, January 15, 2013

ஊட்டியில் தேயிலை சுற்றுலா விழா


ஊட்டி,:நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: ஊட்டியில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா வரும் 22, 23, 24ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரியில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தேயிலை ரகங்கள் காட்சிக்கு வைக்கப்படும். சுற்றுலா பயணிகளிடம் தேயிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது இருக்கும்.

கக்கநல்லா - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை மாநில அரசின் வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசும், மாநில அரசும்தான் முடிவு செய்ய வேண்டும். ஊட்டி ஏரியை தூய்மைபடுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், பல்வேறு முக்கிய ஏரிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment