நீரிழிவு நோய்க்கும், உயர் இரத்த அழுத்தம், இவை இரண்டுக்கும் உள்ள பிணைப்பு பலமானது. கிட்டத்தட்ட 50 சதவிகித நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தமும் உடையவர்கள். இந்த பிணைப்பினால் பல வியாதிகள் / பாதிப்புகள் உண்டாகும்.
நமது இதயம், ஒரு பம்ப் போன்றது. ரத்த ஓட்டத்தை உடலெங்கும் பாய்ச்ச ப்ரஷர் – அழுத்தம் தேவை. இதயம் பம்ப் செய்யும் போது ஏற்படும் ரத்த அழுத்தம் சிஸ்டாலிக் எனப்படும் அதன் பிறகு இதயம் விரிவடைந்து ரத்தத்தை பெறுகிற போது அழுத்தம் குறையும். இதை டயாஸ்டிலிக் என்பார்கள். நார்மல் அளவு 120 / 80. அதாவது ஸிஸ்டாலிக் 120 டையாஸ்டாலிக் 80.
நமது வாழ்நாள் முழுவதும் வேலை செய்து வரும் இதயம், வயதாக வயதாக, பலவீனப்பட்டு வரும். வேறு பல கோளாறுகள் நிகழ்ந்து நாளங்கள் பாதிக்கப்பட்டால் இதயம் செயலிழந்து விடும். இது தான் ஹார்ட் – அட்டாக்.
ரத்த ஓட்டத்தை பாதிப்பது டயாபடிஸ் வியாதி. இரத்த நாளங்களை டயாபடிஸ் சிதைத்து விடும். உயர் இரத்த அழுத்த வியாதியை மௌனமான உயிர் கொல்லி நோய் என்கிறோம். இதனுடன் மற்றொரு தீவிரவாதியான, மௌன கொலையாளி டயாபடிஸீம் சேர்ந்து விட்டால், ஆபத்துகள் அதிகமாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தல் அவசியம்.
பல நிபுணர்கள், டயாபடிஸ் நோயாளிகளின் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சை நீரிழிவு இல்லாதவர்களின் சிகிச்சை முறையை விட சிறிது தீவிரம் குறைவாக இருக்க வேண்டும் என்கின்றனர். வீரியம் வாய்ந்த மருந்துகள், டயாபடிஸ் நோயாளிகளின் உடல் உறுப்புகளை பாதிக்கலாம்.
ஆனால் ஒரு நபருக்கு தொடர்ந்து ஒரே நிலையில் 120 / 80 எம் . எம் . எச். ஜீக்கு அதிகமாக ரத்த அழுத்தம் இருந்தால் அவர் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார் என்று கூறலாம். மருத்துவர்கள் இதை “இரத்தக் கொதிப்பு” – ஹைபர் டென்ஷன் என்பார்கள்.
ரத்த அழுத்தம் அதிகமாக குழாய்களில் இரத்தம் பாயும் வேகம் அதிகமாகும் வேகமாக பாயும் இரத்தம் சில கொழுப்புகள் ரத்த ஓட்ட தடையை உண்டாக்கி விடும். மூளைக்கு போகும் நாளங்கள் அடைப்பட்டால் மூளைத்தாக்கு (Stroke) ஏற்படும். பக்க வாதம் உண்டாகும். இதயத்திற்கு செல்லும் குழாய்களில் தடை ஏற்பட்டால், மாரடைப்பு வரலாம்.
அறிகுறிகள்
தூக்கமின்மை
தலைவலி
கோபம் வருதல்
தலைசுற்றல்
களைப்பினால் முகம் வாடுதல் போன்றவை ஏற்படலாம்.
No comments:
Post a Comment