ஊட்டி. : சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் தாவரவியல் பூங்காவை பார்ப்பதற்காகவே வருகின்றனர். ஆண்டு தோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் பாத்திகளில் உரமிட்டு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று பூஜையுடன் மலர் நாற்று நடவு பணிகள் துவங்கியது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் மோகன் கூறியதாவது:
ஆண்டு தோறும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக மலர் செடிகளை தயார் செய்யும் பணி டிசம்பர் மாதத்தில் துவங்கும். இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகள், தொட்டிகளில் நடவு செய்வதற்காக நர்சரியில் சால்வியா, டெல்பீனியம், பென்ஸ்டீமன், டாலியா போன்ற நீண்ட கால மலர் செடிகளும், ஆஸ்டர், ஆண்டிரைனம், ஆலிசம், பீகோனியா, ஆஜிரேட்டம் போன்ற மலர் செடிகளின் விதைகள் விதைக்கப்பட்டு நாற்றுகள் வளர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பூங்கா முழுவதிலும் 52 ரகங்களில் 3 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இம்முறை புதிதாக 13 வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment