தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. எனவே குழந்தையின்மை பெண்களின் மனதிற்கும், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. வைத்தியரிடம் போவது நல்லது.
குழந்தையின்மையும், ஆண்மை, பெண்மை குறைவும் ஒன்றல்ல. உடலுறவே மேற்கொள்ள முடியாத பாதிப்புகள் ஆண்மை, பெண்மை குறை எனப்படும். குழந்தையின்மை குறை ஆணிடமும் இருக்கலாம் இல்லை பெண்ணிடமும் இருக்கலாம்.
காரணங்கள் (ஆண்)
விந்து குறைபாடுகள், விந்து செல்லும் பாதை அடைப்பு, விபத்தினால் பிறப்புறுப்பில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடுகள், பிறப்புறுக்களின் வளர்ச்சியின்மை இதர பொதுவான வியாதிகள்.
விந்து அசாதாரணமாக, இயற்கைக்கு மாறாக இருப்பது, குறைந்த அளவே உற்பத்தியாவது அல்லது விந்துக்களே இல்லாமல் போவது அல்லது விந்து நகர முடியாமல், ஆணுறுப்பை அடையமுடியாமல் போவது.
ஆணுறுப்புகளுக்கு சூடு – வெப்பம் ஆகாது. உடல் வெப்பநிலையை விட ஆணுறுப்புகளில், உஷ்ணம் குறைவாக இருக்கும். அதிக வெப்ப பாதிப்புகள், விரைகள் பிறவியிலிருந்தே கீழ் இறங்காமல் அடிவயிற்றிலேயே தங்கி விடுவது, பருத்துப் போய், புடைத்து போன இரத்தக் குழாய்கள், நாட்பட்ட ஜீரம் இவைகள் விரைகளின் சூட்டை அதிகரிக்கும்.
ஹார்மோன் குறைபாடுகள் – அதுவும் அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிகளின் கோளாறுகள் விந்து உற்பத்தியாவதை பாதிக்கும்.
சுற்றுப்புற மாசுகள், ரசாயன நச்சுப்பொருட்கள் சேர்ந்த பொருட்கள் டியோடரண்ட், ஷாம்பு, ஆஃடர்ஷேவ் லோஷன் விந்துவை பாதிக்கின்றன.
பிறவிக் கோளாறுகளால் செக்ஸ் குரோமோசான்கள் விந்து உற்பத்தியில் குறைபாடை ஏற்படுத்தும்.
மம்ஸ் போன்ற நோய்கள்.
ஸ்டீராய்ட் மருந்துகள் ஹார்மோன் அளவுகளை குறைத்து விந்து உற்பத்தியில் தலையிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
அபூர்வமாக விந்து முன்னே செல்லாமல், பின்னால், ரிவர்ஸில் சென்று விடும். நீரிழிவு நோயாளிகளுக்கும், இடுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இது ஏற்படலாம்.
பெண்களின் குறைபாடுகள்
மாதவிடாய் பிரச்சனைகள். மாதம் ஒரு முறை சினைமுட்டை வெளியாகாமல் போவது. ப்ரோஜிஸ்டெரோன் ஹார்மோன் சுரக்காமல் போவது.
இந்த ப்ரோஜிஸ்டெரோன் ஹார்மோன், மாதா மாதம் கருப்பை பையின் உட்படையை, கெட்டியாக்கும். முட்டையின் வரவை எதிர்நோக்கி இந்த வேலையை அது செய்கிறது. மூளை, பிட்யூட்டரிக்கு தேவையான கோனாடோட்ரேபின் என்ற ஊக்குவிக்கும் ஹார்மோனை அளிக்க முடியாமல் போனால், முட்டை உற்பத்தியாகாது.
கர்ப்பப்பையின் வாய் பாகம் தொற்று நோயால் பாதிக்கப்படுவது அடைத்துக் கொள்வது, கர்ப்பப்பை இடம் மாறுவது. சோகை, போன்றவை.
தைராயிடு, அட்ரீனலின் சுரப்பிகளின் கோளாறுகள், நீரிழிவு நோய், அதிக உடல் பருமன்.
சீரான மாதவிடாய் இல்லாமை, மாதவிடாய் போது வலி, குறைந்த உதிரப்போக்கு, முட்டை கருப்பைக்கு வரும் பாதையில் அடைப்பு. இதனால் முட்டை கருப்பையை சேரமுடியாமல் போகும்.
சாதாரணமாக பெண்களின் கருப்பையில் இருக்கும் சளி கெட்டியாகவே இருந்துவிடும். விந்துவால் உள்ளே பிரவேசிக்க முடியாது. தவிர தொற்றுநோய்க்காக கொடுக்கப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகள் விந்துவையும் நாசம் செய்து விடலாம்.
பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புகளின், பிறவிக்கோளாறுகள் கருப்பப்பை, அதன் பாதைகள் இவற்றில் கட்டி ஏற்படுதல்.
இந்த குறைபாடுகளை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத முறைகள்
முதலில் உடல் கோளாறுகளை சரி செய்தபின், குழந்தை உண்டாகும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதன் பிறகு கருப்பையில் குழந்தை சரியாக வளர பிரத்யேக மருத்துவ கவனம் அளிக்கப்படும்.
ஷோதனா சிகிச்சை முறைகள்
ஸ்நேகபானம் – ஸ்பெஷல் மூலிகை செறிந்த நெய் காலையில் கொடுக்கப்படும். குறைந்த அளவில் ஆரம்பித்து, மெதுவாக அதிக அளவுகளில் கொடுக்கப்படும்.
ஸ்வீதானம் – மருந்துகள் கலந்த நீராவி குளியல் செய்விக்கப்படும்.
விரேசனம் – உடலின் விஷங்களை வெளியேற்றும் சிகிச்சை
கஷாய வஸ்தி – பிரத்யேக மருந்துகளை எனிமா கொடுக்கப்படும். இது நரம்புகளை திடப்படுத்தும்.
ஸ்நேக வஸ்தி – மருந்து கலந்த எண்ணைகள் கொடுக்கப்பட்டு பிறப்புறுப்பு – சிறுநீர் பாதைகளை சரிப்படுத்தப்படும்.
ஒட்டார வஸ்தி – கருப்பப்பை, ஜனனேந்திரியல்களை சுத்திகரித்து, எண்ணைப் பசையை உண்டாக்க, பிரத்யேக நெய் கொடுக்கப்படும்.
பிறகு சற்று ஓய்வுக்குப் பின் வாஜீகர்ணம் சிகிச்சையால் விந்துவின் குணம், தரம், அளவு இவற்றையெல்லாம் மேம்படுத்தி உடல், ஆண்மை பலப்படுத்தப்படும்.
யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் (மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டிய யோகாசனங்கள் (முறையாக பயின்ற பின்)
சூர்ய நமஸ்காரம்
ஹாலாசனம்
சிரசானம்
பத்த கோனாசனம்
கூர்மாசனம்
அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்
பரியாங்காசனம்
பஸ்சிமோத்ஸானம்
மூலபந்தாசனம்
சர்வாங்காசனம்
புஜங்காசனம்
தநுராசனம்
உபவிஷ்ட கோனாசனம்
கந்தாசனம்
சவாசனம்.
No comments:
Post a Comment