Tuesday, January 15, 2013

ஆயுர்வேதமும் ஆர்த்தரைடீசும்


எகிப்து நாட்டின் மம்மிகளில் (Egyptian Mummies) கூட, பண்டைய நாட்களில் ஆர்த்ரைடிஸ் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆர்த்ரைடிஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. மூட்டுப்பிடிப்பு ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகமாகத் தாக்குகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ, குளிர் பிரதேசங்கள், மலைகளில் வசிப்பதாலோ, உடலை அதிகக் குளிருக்குட்படுத்திக் கொள்வதாலோ, மற்றும் பரம்பரைக் காரணத்தினாலோ ஏற்படலாம்.
ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid Arthritis) பெரும்பாலும் கால் மூட்டுக்களையும் கை விரல்களையும் தான் முதலில் பாதிக்கிறது. பின்னர் தோள்பட்டை, மணிக்கட்டு, முழங்கைமூட்டு போன்றவற்றிற்குப் படிப்படியாக பரவுகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் எல்லா மூட்டுகளுமே ஒட்டு மொத்தமாக வீக்கத்திற்குட்பட்டு அழற்சியை அதிகப்படுத்திவிடுகின்றன. வலி அதிகமாக இல்லாவிடினும், உடல் இயக்கத்திற்கு மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மிகப் பெரிய மூட்டுக்களான பந்துக்கிண்ண மூட்டு, கைமூட்டு போன்றவற்றில், அதிக அளவு பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் வெப்பத்தையும், சிவந்த தோற்றத்தையும் உண்டாக்கிவிடுகின்றன. எலும்புகளின் கோளாறை எக்ஸ்ரே செய்து பார்ப்பதன் மூலம் தெளிவாக அறியலாம். நரம்பிழை மற்றும் தசை நார்களில் ஏற்படும் கடுமையான அழுத்தம் கூட ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் தோன்ற வழி வகுக்கலாம்.
ஆயுர்வதே சிகிச்சை முறைகள்

1. மலச்சிக்கல் அஜீரணத்தை போக்குதல்

2. மசாஜ் – மூலிகை எண்ணைகளால்

3. நடமாட்டம் முடங்கியிருந்தால் அதை சீர் செய்வது.

4. உள் மருந்துகள், வெளிப்பூச்சுக்களுக்கான தைலம்

5. வாழ்க்கை முறை மாற்றங்கள், பத்தியம்.

பொதுவாக கீழ்கண்ட சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன

1. மருந்துகள்

2. அப்யங்கா (மசாஜ்)

3. ஸ்வேதனா (ஒத்தடம் கொடுப்பது)

4. உணவுக்கட்டுபாடு

5. யோகா

6. ஓய்வு

இவை தவிர தேவைப்பட்டால், நவரக்கிழி, பிழிச்சல், தாரை, யாபனா
வஸ்தி (எனிமா) இவை செய்யப்படும். இவற்றால் தசைகள் வலுப்படும்.

வீட்டு வைத்தியம்

(ஆ) உள்மருந்துகள்

1. பாகல் பழங்களை உப்பு, இஞ்சியுடன் வேகவைத்து, உணவுடன் உண்ணலாம்

2. கொள்ளு (Dolichos biflorus) சூப் வாதத்தை கண்டிக்கும். உடல் எடை குறைய உதவும்.
3. உலர்ந்த இஞ்சி (சுக்கு), தனியா (கொத்தமல்லி விதை) இவற்றின் கஷாயம் வாதத்தை உண்டாக்கும் அஜீரணத்தை போக்கும். கூட ஆமணக்கு எண்ணை சேர்த்துக் கொண்டால் ரூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸீன் வலியை போக்கும்.

4. உலர்ந்த இஞ்சி (சுக்கு), நெரிஞ்சி (Tribulus Terrestris) இவற்றினால் தயாரிக்கப்பட்ட கஷாயம், அஜீரணத்தை போக்கும். இதை காலையில் குடிக்க வேண்டும். அஜீரணம் குணமானால் ஆமவாத பாதிப்புகள் குறையும்.

5. வேப்பிலை சாறு, பால் சேர்த்து பருகினால் ஆமவாத வலியை குறைக்கும்.

உணவு கட்டுப்பாடு

வயிற்று கோளாறுகள் மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு – இவற்றுக்கு முக்கிய காரணம். எனவே லகுவான, கொழுப்பில்லாத, உணவுகளை உண்பது உசிதம். மூட்டுவலிக்கு ஏற்ற உணவுகள் தனியே தரப்பட்டுள்ளன.

இதர குறிப்புகள்

1. மூட்டுகளில் வலியை உண்டாக்கும் வேலை, செயல்களை பயிற்சிகள் இவற்றை தவிர்க்கவும்.

2. சரியாக, உட்கார வேண்டும்; மற்றும் நிற்க வேண்டும்.
3. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் எடையை குறைக்கவும்.

4. ’கெட்டியான’ படுக்கையில் படுக்கவும்.

5. மலச்சிக்கல், அஜீர்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

6. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் நோய் தீவிரமாக தாக்கும் போது முழு ஒய்வு தேவை.

உடற்பயிற்சி, யோகா

ஆர்த்ரைடீஸ் வியாதிகள் வராமல் தடுக்க உடற்பயிற்சியும், யோகாவும் சிறந்தவை. ஆனால் ருமாடிஸம் வந்தபின், உடற்பயிற்சி, யோகா, இவற்றை டாக்டரிடம் கலந்தாலோசித்து பின் மேற்கொள்ளவும்.

ஆமவாதம், சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அங்கஹீனத்தை
உண்டாக்கிவிடும். மேலும் பலசிக்கல்கள் ஏற்படும். எனவே வாத அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். பொதுவாக ஆமவாதம், ஏன் ஆர்த்ரைடீஸ் வியாதிகள், பூரணமாக குணப்படுத்த முடியாதவை.

ஆர்த்தரைடீஸ்க்கு செய்ய வேண்டிய ஆசனங்கள்

சூரிய நமஸ்காரம் – விபரீத கரணி, சர்வங்காசனம், பத்மாசனம், சலபாசனம், தனுராசனம், சிரசாசனம், சவாசனம்.

ருமாட்டிசத்துக்கு செய்ய வேண்டிய ஆசனங்கள்

சிரசாசனம், ஹலாசனம், பச்சிமோத்தாசனம், சர்வங்காசனம், புஜங்காசனம், தனுராசனம், சவாசனம்.

இரண்டிற்கும் ஏற்ற பிராணாயாமம்

அனுலோமா – விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்திகரிப்பு.

No comments:

Post a Comment