Wednesday, January 9, 2013

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினசரி மார்க்கெட்


ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் (1935) . ஈரோடு இன்றைக்கு உள்ளது போலவே சோழர் காலத்திலும் மிக்பெரிய வணிக மையமாக விளங்கி வந்துள்ளது. தற்போது ஆர்கேவி சாலையில் செயல்பட்டு வரும் தினசரி காய்கனி மார்க்கெட் 800 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இரண்டு பெரும் தெருக்களை சேர்த்து மார்க்கெட் செயல்பட்டு வந்ததால் ஆரம்பத்தில் பெருந்தெரு என்று தான் அழைக்கப்பட்டு வந்தது.

தற்போது காய் கனிகள் மட்டுமே விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஆரம்பத்தில் காய்,கனிகள் உள்பட அனைத்து பொருட்களும் விற்கப்பட்டு வந்ததால் பொதுமார்க்கெட் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. தெருக்களில் வைத்து தான் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 1935ம் ஆண்டில் அப்போதை ஈரோடு நகராட்சியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது மார்க்கெட்டிற்கு அருகில் மணிக்கூண்டு அப்போதைய கோவை கலெக்டராக இருந்து வந்த கோல்டுஒர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.

இந்த மணிக்கூண்டு மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்துள்ளது. தற்போது ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் என்ற பெயரில் செயல்பட்டு இந்த மார்க்கெட்டில் 806 கடைகள் உள்ளன.

No comments:

Post a Comment