Wednesday, January 9, 2013

வேலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்



வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வாலயம் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் அழகுடனும், கலை அம்சத்துடனும்

ஓவியங்களும் சிற்பங்களும் அமையப் பெற்றுள்ளன. வருடம் முழுவதும் அனைத்து விழாக்களையும் பக்தர்கள் சிறப்புடன் தரிசித்து அருள் பெற்று வருகின்றனர்.இங்குள்ள சுற்றுப் பிரகாரங்களும்

,கல்யாண மண்டபமும் மிக எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன.பெரிய மசூதி வேலூர் பாக்கியாத் சாலையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற பெரிய மசூதி உள்ளது.இம்மசூதியில் 2000 பேர்

அமர்ந்து தொழுகை செய்ய முடியும். அதன் பின்புறம் ஜாமி ஆ பாக்கியாத்துஸ்ஸா லிஹாத் அரபுக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் முதல் அரபுக்கல்லூரி.

இக்கல்லூரியை தென்னிந்தியாவின் இஸ்லாமியத்தாய் கல்லூரி என்கின்றனர்.

முத்துமண்டபம்

இலங்கையில் கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான விக்கிரம ராஜசிங் ஆங்கிலேயருடன் நெடுங்காலம் போரிட்டு இறுதியில் சிறை பிடிக்கப்பட்டு வேலூர்  கோட்டையில் சிறைவாசத்திற்கு பின்

இறந்தார். அம்மன்னனின்  சமாதியில் அமைக்கப்பட்ட நினைவாலயமே முத்துமண்டபம் என வழங்கப்படுகிறது.முத்துமண்டபம் வேலூர் - காட்பாடி சாலை பழைய பாலத்தின் அருகே பாலாற்றின்

தென்கரையில் உள்ளது.

ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம்

விரிஞ்சிபுரம் வேலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். ஐந்து பிரகாரங்களைக்

கொண்டுள்ளது கோயில். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது. கருவறை லிங்கத்தின் இடது

புறத்தில் உள்ள சிங்கமுக சிற்பம் எழில் நிறைந்தது.'சூரியனின் ஒளிக்கதிர்கள் பங்குனி மாதத்தில் மட்டுமே சிவலிங்கத்தின் மீது சூரிய கிரகணங்கள் விழுவது குறிப்பிடத்தக்கது'.

ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில்

ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில் முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயணி பீடத்தினால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க

நிறத்தில் ஜொலிக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. ஆறு வருடங்களில், 600 கோடி

ரூபாய் செலவில், 55 ஆயிரம் சதுர அடியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கராகும். வேலூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமாக

உள்ள இந்த கோயில் மனதிற்கு அமைதி தருவதாக அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்

வேலூர் கோட்டையில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலைப்பொருட்கள், கற்சிலைகள், கல்வெட்டுகள், ஓவியங்கள், முற்காலத்தில் அச்சிட்ட நாணயங்கள், ஆதிகால மனிதர்கள்

வாழ்க்கை முறை, வரலாற்று சின்னங்கள் பற்றிய பொருட்காட்சிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன

சி.எம்.சி. மருத்துவமனை

வேலூரில் டாக்டர் ஜடாஸ்கடர் சி.எம்.சி.யை தொடங்கி 100 ஆண்டுகள் ஆகி விட்டன. ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற புகழ்பெற்ற மருத்துவனையாக இது திகழ்கிறது. உலகின் பல்வேறு இடங்களில்

இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதிநவீன கருவிகளைக் கொண்டு இங்கு எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏலகிரி மலை

  தமிழகத்தில் உள்ள முக்கிய மலைவாழ் சுற்றுலா சிறப்பிடங்களில் ஒன்று ஏலகிரி மலை. உள்ளூர் மக்களால் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. வேலூரில் இருந்து 91 கி.மீ தொலைவில்

திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது.
இங்குள்ள புங்கனூர் ஏரி, படகு சவாரி, பூங்கா மலையேற்ற வழித்தடங்கள், வேலவன் கோயில் , தொலைநோக்கு மையம், மூலிகை பண்ணை, இயற்கை எழில் மிக்க மலைப்பகுதி ஆகியவை சிறந்த

பொழுதுபோக்கு மையமாக திகழ வழிவகுக்கிறது. இங்கு தோட்டக்கலைத்துறை மூலம் அபிவிருத்திப்பணிகளும் வனத்துறை மூலம் மிருக காட்சி சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இங்கு

யாத்ரி நிவாஸ் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது இயற்கை எழில் மிக்க, காணத்தக்க சுற்றுலா ஸ்தலமாகும்.

வேலூர் கோட்டை மற்றும் அகழி

சுற்றுலாபயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கும் வகையில் வேலூரின் நடுவே அமைந்துள்ள கோட்டை கி.பி.16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் விஜயநகரப் பேரரசின் சதாசிவ தேவ மகாராயரின்

கீழ் பணிபுரிந்த சின்ன பொம்மு நாயக்கரால் நிறுவப்பட்டது. விஜயநகரப் பேரரசு, இஸ்லாமிய பேரரசு, மராட்டிய பேரரசு, மற்றும் ஆங்கிலேயப் பேரரசுடன் பல்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய

வரலாற்றுப்புகழ் பெற்ற கோட்டையாக இருந்து வந்துள்ளது.   ஆங்கிலேயர் கைக்கு இக்கோட்டை வந்தபொழுது, ஸ்ரீரங்கப்பட்டண வீழ்ச்சிக்குப் பிறகு திப்புசுல்தானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு திப்பு

மகாலில் அடைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட 1806ம் ஆண்டு நடைபெற்ற முதல் சிப்பாய்க்கலகம் இங்கு ஏற்பட்டது.

ஆங்கிலேயரை எதிர்த்த இலங்கையில் உள்ள கண்டியை ஆண்ட மன்னன் விக்ரம் ராஜசிங்கே இக்கோட்டையின் உள்ளே உள்ள கண்டி மகாலில் சிறை வைக்கப்பட்டார் ஆகியவை வேலூர் கோட்டையின்

சிறப்புகளாகும். நாற்கரவடிவில் அமைந்துள்ள எழில் மிக்க இக்கோட்டையினுள் திப்பு மகால், ஹைதர் மகால், பேகம் மகால், பாதுஹா மகால், கண்டி மகால், இந்திய தொல்பொருள் துறை

அருங்காட்சியகம், கலையம்சத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1846ல் கட்டப்பட்ட அழகிய புனித ஜான் தேவாலயம், ஆற்காடு நவாப்பால்

கட்டப்பட்ட சதுர வடிவ மசூதி, தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. அகழியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துடுப்பு படகு சவாரி

கட்டணம் பெரியவர் ஒருவருக்கு ரூ10வீதமும், சிறியவருக்கு ரூ.5 வீதமும், இரண்டு பேருக்கான பெடல் படகு சவாரி ரூ.50 வீதமும், வாரநாட்களில் காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 3மணி

முதல் 7 மணி வரையிலும், வாராந்திர நாட்களில் மாலை 3 மணி முதல் 7 மணி வரையிலும் இயக்கப்படுகிறது.

சைதானிபீபி தர்கா

வேலூர் கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது சைதானிபீபி தர்கா. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தீர்க்கும் மருத்துவராக வணங்கி வருகிறார்கள். மத பேதமில்லாமல் அனைவரும்

வந்து வணங்கும் இடம். விண்ணரசி பேராலயம்வேலூர் ரவுண்டானா அருகில் கட்டப்பட்டுள்ளது விண்ணரசி பேராலயம். இது 115 அடி உயரமும், 21 ஆயிரம் சதுர அடி அகலமும் கொண்டிருக்கிறது. ஆசிய

கண்டத்திலேயே அழகுமிக்க பேராலயமாகும். அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழித்துணை விநாயகர் ஆலயம், செதுவாலை

வேலூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் செதுவாலை என்னும் இடத்தில் இருந்து வடக்கே ஒரு கி.மீ., தூரத்தில் வழித்துணை நாதர் கோயிலைக் காணலாம். இறைவன்

கர்நாடக மாநில மிளகு வியாபாரிக்கு காஞ்சிபுரம் வரை வழித்துணையாக சென்ற போது இவ்விடத்தில் இறைவனுடைய பாதங்கள் பட்டதால் அதன் நினைவாக உருவானது இத்திருக்கோயிலாகும்.

கார்த்திகை கடை ஞாயிறு திருவிழா அன்று பெண்கள் புத்திரபாக்கியம் வேண்டி பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தனை செய்வது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.

அமிர்தி காடு

வேலூரில் இருந்து தெற்கே 25 கி.மீ., தொலைவில் இயற்கை வனப்புடன் கூடிய பசுமையான வனப்பகுதி அமிர்தி காடு. இதில் ஒரு பகுதி சுற்றுலா இடமாகவும், மறு பகுதி பூங்கா மற்றும் வனவிலங்கு

சரணாலயமாகவும் வளர்ந்து வருகிறது. பருவ காலங்களில் இங்குள்ள சிற்றோடை மற்றும் நீர்வீழ்ச்சி காண்போரை கவர்கிறது.

பாலமதி மலை

வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1800 சுற்றுலா இடம் பாலமதி மலை இக்குன்றில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. எட்டு கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த

மலைப்பயணம் சுற்றுலாப்பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

டில்லி கேட்

ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு பைபாஸ் ரோட்டில் ஒரு நுழைவுவாயிலுக்கு டில்லி கேட் என பெயரிடப்பட்டுள்ளது. 1751ல் ஆற்காடு நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியை

கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அப்போது ஆற்காட்டுக்குள் நுழைபவர்கள் இவ்வழியாகத்தான் வரவேண்டியிருந்தது.

பள்ளிகொண்டா

வேலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைணவ திருத்தலம் பள்ளிகொண்டா. இங்குள்ள உத்திர ரங்கநாதர் திருக்கோயில் தொன்மை சிறப்பு மிக்க கோயிலாக விளங்கி வருகிறது.

பாண்டியர் கால கட்டடப் பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

வேலூரில் இருந்து 102 கி.மீ தொலைவிலும் திருப்பத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும், ஏலகிரி மலையின் பின்புறம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் அருகில் லிங்க வடிவ முருகன்

ஆலயம் உள்ளது. பருவகாலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது.

No comments:

Post a Comment