Tuesday, January 8, 2013

கோடைக்கால அழகு குறிப்புகள்

மற்ற எந்த நாட்களையும் விட கோடையில்தான் நமது சருமமும், கூந்தலும் அளவுக்கதிகமாக பாதிக்கப்படும். எனவே அவற்றுக்குப் பிரத்யேகக் கவனிப்பும், பராமரிப்பும் தேவை. மிக அதிக நேரம் வெயிலில் அலைபவர்களது சருமம் சீக்கி ரமே முதுமைத் தோற்றத்தை அடையவும், சருமப் புற்று நோயால் பாதிக்கப் படவும் வாய்ப்புகள் அதிகமாம்.
வெயிலில் எங்கே செல்ல நேர்ந்தாலும் தலைக்குத் தொப்பி அணிந்து போவது பாதுகாப்பானது.
கோடையின் பாதிப்பைத் தடுக்க சில அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக
சன் ஸ்க்ரின் லோஷன் உபயோகிக்கவும்:
மேக்கப் போட ஆரம்பிப்ப தற்கு முன்பே சன் ஸ்க்ரின் லோஷன் அல்லது கிரிம் தடவ வும்.வெயிலின் பாதிப்பைத் தடுக்க இது மிக முக்கியம். எந்த சன் ஸ்க்ரினை உபயோகித்தாலும் அதன் பலன் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. எனவே மறுபடி தடவ வேண்டும். முகத் தில் மட்டும் என்றில்லாமல் உடலில் வெயில் படக்கூடிய எல்லா இடங்களிலும் அதைத் தடவிக்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment