Tuesday, January 8, 2013

இந்திய கோழி கறி




தேவையான பொருட்கள்:

1. கோழி 1
2. மல்லி 3 மேசைக்கரண்டி
3. காய்ந்த மிளகாய் 18
4. சின்ன ஜீரகம் 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
6. பெரிய வெங்காயம் 3
7. தயிர் 3 மேசைக்கரண்டி
8. எண்ணெய் 8 மேசைக்கரண்டி
9. உப்பு தேவையான அளவு

செய்முறை :

1. காய்ந்த மிளகாய், மல்லி, சின்ன ஜீரகம் இவற்றை வறுத்து அரைக்கவும்.

2. கோழியைப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3. அரைத்த கலவையில் தயிர் , மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

4. வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

5. எண்ணெய் ஊற்றி கோழித் துண்டுகளை வதக்கவும். எந்த தாளிப்பும் தேவையில்லை.

6. நல்ல வாசம் வரும் போது, வெட்டிய வெங்காயத்தைப் போட்டு, 1 1/2 குவsளை தண்ணீரை விட்டு வேக விடவும். வட இந்திய கோழி கறி ஆச்சி.. 

No comments:

Post a Comment