Wednesday, January 9, 2013

உதடுகளை பராம‌ரியு‌‌ங்க‌ள்


உ‌ங்க‌ள் உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தை‌ப் பெற வே‌ண்டுமெ‌னி‌ல், உதடுக‌ளி‌ன் ‌மீது பீட்ரூட் சாறு தட‌வி வரவு‌ம்.

உதடுகள் வழுவழுப்பாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்க ரோஜா இதழ்களை அரைத்து தடவவுது சிறந்தது.

வெந்நீரால் உதடுகளைக் கழுவி, வாஸலின் மற்றும் தேன் கலந்து குறைந்தது வாரத்திற்கு இரு முறை உதடுகளில் தடவி வரவும். உதடுகளில் வெடிப்புகள் மறையும்.

உதடுகள் பிளவுபடாமல் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவவுவது நல்லது.

ரோஜா இதழ்களை வெண்ணெயில் கலந்து அதை அரை‌‌த்து உதடுகளில் தடவலாம்.

இரண்டு துளி கிளிசரின் மற்றும் 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் தடவவும். உதடுகள் பிளவுபடாமல் இருக்கும்.

நாம் உண்ணும் உணவில் வைட்டமின் பி மற்றும் ஸி ஆகியவற்றை அதிகம் உட்கொள்வதால் உதட்டு வெடிப்பைத் தடுக்கலாம்.

இரண்டு துளி கிளிசரின் மற்றும் ஒரு தேக்கரண்டி பாலாடை உதடுகளில் தடவி வரவும். உதடுகள் வழுவழுப்பாக, மாறும்.

No comments:

Post a Comment