Tuesday, January 8, 2013

மருத்துவக் குறிப்புகள்

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர
வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால்
தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை
வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை
கரகரப்பு குணமாகும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு
சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை
சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

No comments:

Post a Comment