Tuesday, January 8, 2013

எண்ணெய் வகைகள்


எண்ணெய் வகைகளில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் மற்றும் கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய் வகைகள் சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. எனவே இவை அழகுசாதனத் தயாரிப்பில் சேர்க்கப்படுகின்றன

ஆலிவ் எண்ணெய்
சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாய்க்கும் பயன்படுத்தினர். இதிலிருந்து எண்ணெய் எடுத்து உபயோகப்படுத்தினர். தூய்மைக்கும், சமாதானத்திற்கும் சின்னமாக விளங்குவது ஆலிவ். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment