Tuesday, January 8, 2013

முகப் பொலிவிற்கு


1. வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு மூன்றும் சம அளவு கலந்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகம் கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகப்பரு குறையும்; முகம் பொலிவடையும்.

2. 50 மி.லி. பால், சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து முகம் கழுவினால் சருமத்தில் உள்ள துவாரங்கள் சுத்தமாகும்.

3. மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணை சம அளவு கலந்து முகத்தில் தடவினால் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.

4. ஒரு தேக்கரண்டி உளுந்துடன் 4 பாதாம் பருப்புகளை சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும்.

5. ஒரு மேஜைக்கரண்டி பால்பவுடர், ஒரு தோல் நீக்கிய வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்து, பசையை முகத்தில் தடவவும். 15 - 20 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

6. ஒரு முட்டையை நன்கு அடித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.

7. அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும்.

8. ஒரு முட்டை மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி விட்டமின்-இ எண்ணை மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் இளம் சூடான நீரில் கழுவவும்.

9. ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.

10. ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

No comments:

Post a Comment