Sunday, January 6, 2013

கார்ன்-கொண்டைக்கடலை கட்லெட்



 
என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் சோளம் - 1 கப், கருப்பு கொண்டைக் கடலை - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி - சிறிது, கிராம்பு -2, காய்ந்த மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

சோளத்தை மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கொண்டைக் கடலையை ஊற வைத்து, அத்துடன் கிராம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன கட்லெட்டுகளாக தட்டி, சூடான தோசைக்கல்லின் மேல் வைத்து, எண்ணெய் விட்டு, இரண்டு பக்கங்களும் வேகவிட்டு, எடுத்து சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்.

தொகுப்பு: ஆர்.வைதேகி

படங்கள் : கிருஷ்ணமூர்த்தி

சந்திரலேகா ராமமூர்த்தி

No comments:

Post a Comment