Tuesday, January 8, 2013

வாழைப்பூ அடை

தேவையானவை: 

புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், வாழைப்பூ - ஒன்று, காய்ந்த மிளகாய் - 4, பெரிய வெங்காயம் -1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பை தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும், வாழைப்பூவை ஆய்ந்து உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து வெந்த வாழைப்பூவை போட்டு, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வெங்காய வாசமும் வாழைப்பூவின் ருசியும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும்.

No comments:

Post a Comment