Wednesday, January 9, 2013

பேரிச்சம்பழ உருண்டை

தேவையான பொருட்கள்:


வெண்ணை : 1/2 கப்
வெள்ளம் : 1/2 கப்
பேரிச்சம்பழம் : 1 1/2 கப் (கோட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்)
முட்டை : 1 (லேசாக அடித்து கொள்ளவும்)
வெணிலா எசன்ஸ் : 1 டீ ஸ்பூன்
தோல் நீக்கிய பாதம்
அல்லது வால் நட்ஸ் : 1/2 கப்
ரைஸ் சீரீயல் அல்லது
கான் பிளேக்ஸ் : 2 கப் (கான் பிளேக்ஸ் பொடி பண்ணிக்கொள்ளவும்)



செய்முறை

வெண்ணை, வெள்ளம், பேரிச்சம்பழம், முட்டை, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கிகொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொட்டி குறைந்த சூட்டில் 8 நிமிடத்திற்கு கிண்டவும். கலவை, அல்வா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்தி, பாதாமை அதில் சேர்த்து நன்கு கிளறவும். சூடு ஆரியதும் வெணிலா எசன்ஸ், ரைஸ் சீரீயல் இரண்டையும் சேர்க்கவும். சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இது குழுந்தைகளுக்கு ரொம்ப நல்லது. 

No comments:

Post a Comment