Tuesday, January 8, 2013

டிப்ஸ்


1. பபிள்கம் ஒட்டிக் கொண்ட ஆடைகளை ஒரு மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து எடுத்தால் எளிதில் பபிள்கம் கறையை நீக்கலாம்.

2. ஒரு கையளவு வெந்தயத்தை இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெந்தயத்தையும், ஊற வைத்த நீரையும் குடிக்க, அல்சர் சரியாகும்.

3. எறும்புத் தொல்லையிலிருந்து விடுபட, வெள்ளரித் தோலை எறும்புக் குழிக்கு அருகில் வைக்கவும்.

4. சுத்தமான ஜஸ் கட்டிகளைப் பெற, ஃபிரீஸரில் காயச்சி ஆறிய நீரையே ஜஸ் ஆக்க வைக்கலாம்.

5. வெள்ளை நிறத் துணிகளை துவைக்கும் முன் எலுமிச்சைச் சாறு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து துவைக்க, துணிகளின் நிறம் பளிச்சிடும்.

6. எலுமிச்சையில் அதிக சாறு எடுக்க, பழத்தை சற்று நேரம் வெந்நீரில் ஊற வைத்து பிழியவும்.

7. புரை ஊற்றிய பால் சீக்கிரம் தயிராக, காய்ந்த மிளகாய் ஒன்றை பாலில் போட்டு மூடி வைக்கவும்.

8. மீன் வாசம் உங்கள் கைகளிலிருந்து போக, ஆப்பிள் வினிகரை கைகளில் தேய்த்துக் கொள்ளவும்.

9. முட்டைக்கோஸ் சமைக்கும் போது வரும் வாசனை பிடிக்கவில்லையென்றால் அதனுள் ஒரு சிறிய பிரட் துண்டைச் சேர்த்து சமைக்கவும்.

10. முட்டைகளை சீக்கிரம் வேக வைக்க, தண்ணீருடன் சிறிது உப்பு சேர்க்கவும்.

11. குறும்பு சுட்டிகளின் கையெழுத்து வீட்டுச் சுவரெங்கும் இருக்கிறதா? டூத் பேஸ்ட் போட்டு தேய்க்க, சுவர் பளிச்சோ பளிச்!

12. எலிகளை விரட்ட, அவை வரும் பாதையில் மிளகுப் பொடியை தூவி வைக்கலாம்.

13.வெங்காயம் உரிக்கும் போது, பபிள்கம் மென்றால் கண்ணீர் வராது.

14. ஊற வைத்த கறுப்பு சுண்டலுடன் ஒரு பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட, கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.

15.வேக வைத்த உருளைக் சில நொடிகள் குளிர்ந்த நீரில் போட்டு பின் தோலுரிக்க, எளிதில் வரும்.

No comments:

Post a Comment