Tuesday, January 8, 2013

வெல்ல சீடை

பச்சரிசி மாவு மற்றும் உளுத்த மாவு


வெல்லம் - மாவு 1 கப் என்றால் பாகு வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 4
எள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் அல்லது பற்களாக கீறிக் கொள்ளவும்
பொரிக்க எண்ணெய்

வெல்லத்தை சீவிக் கொண்டு, ஒரு பால் கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு, வடிகட்டி வைக்கவும்.

வாணலியில், ஒரு கப் தண்ணீர் வைத்து கொதித்த பின், வெல்லக் கரைசலை ஊற்றி, ஒரு கம்பி பதத்தில் வந்ததும், அடுப்பை அனைத்து விடவும்.

பச்சரிசி மற்றும் உளுத்த மாவை போட்டு எள், ஏலம், தேங்காய் துருவல் போட்டு, தண்ணீர் விடாமல் கரண்டியால் பிசறிக் கொள்ளவும்.

மாவில் கொஞ்சம் , கொஞ்சமாக வெல்லப் பாகை ஊற்றி பிசைவும். கையில் கொஞ்சம் வெண்ணையோ, நல்லெண்ணையோ தடவிக் கொண்டு பிசைந்து கொண்டு, சிறிது பெரிய உருண்டைகளாக உருட்டவும்.

கண்டிப்பாக மாவை வறுத்துதான் செய்ய வேண்டும். இல்லையெனில் சீடைகளை எண்ணையில் போட்டவுடன் விரிந்து கொண்டு, கரைந்து விடும்.  

No comments:

Post a Comment