Tuesday, January 8, 2013

கருவளையம் மறைய


வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும் பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும் வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment