Tuesday, January 8, 2013

சிக்கன் பஃப் (Chicken Puff)

தேவையான பொருட்கள் :
பஃப் (Chicken Puff) பேஸ்ட்ரி -ஒரு பாக்கெட்
எலும்பில்லாத கோழி-அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி- 20 கிராம்
பூண்டு- 20 கிராம்
கிராம்பு- 4
பட்டை-1
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
மிளகுத்தூள் -ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன்
சோம்பு அரை- ஸ்பூன்
கரம் மசாலா -1 ஸ்பூன்


அரைக்க வேண்டியவை :


இஞ்சி, பூண்டு, கிராம்பு, மஞ்சள்தூள், பட்டை அனைத்தையும் நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அரைத்த கலவையை இதனுடன் சேர்க்கவும். பிறகு தக்காளி, கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூளை இதனுடன் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய கோழித்துண்டுகளை தேவையான அளவு உப்புடன் சேர்த்து ஈரப்பசை போக, சுக்கா வறுவலாக வறுத்தெடுக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளை இதனுடன் கலந்து இறக்கவும். இறக்கியபின் ஒரு ஸ்பூன் மிளகுத்துளைச் சேர்த்து நன்றாக குலுக்கிவிடவும். இப்போது பஃப்-க்குள் வைக்கவேண்டிய சிக்கன் கலவை ரெடி. இந்தச் சிக்கன் கலவையை பஃப்-க்குள் வைப்பதற்கு ஏதுவாக, கிட்டத்தட்ட கைமா செய்வதுபோல் சிறுசிறு துண்டுகளாகப் பொடி செய்து கொள்ளவும்.


No comments:

Post a Comment