Tuesday, January 8, 2013


தேங்காய் பர்பி

தேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது சர்க்கரை - 1 கப் (200 கிராம்) ஏலக்காய் - 4 (பொடி செய்தது) முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது) நெய் - 1 தேக்கரண்டி (வறுக்க) செய்முறை 1. முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 2. அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். 3.பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். 4.நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும் 5.ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். 6.ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும். 7.லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும். குறிப்பு 1.அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும் 2.கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும். 3பாகு பதம் தாண்டி விட்டால் பர்பி மிகவும் கெட்டியாகி விடும். 4.தேங்காய்த் துருவலை வறுத்துப் போடுவதால் பர்பி சீக்கிரம் கெட்டுப் போகாது.

அழகு குறிப்புகள் 

எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும். வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும். வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம். குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம். முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம். களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம். உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும். பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும். அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு. 

 பனானா கேக் 

 தேவையானவை: கெட்டியான வாழைப்பழம் – 1, அரிசி மாவு – முக்கால் கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், வாழை இலை, செர்ரிப்பழம் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: தேங்காய்ப்பாலில் உப்பு, சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். இட்லி மாவு பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாழைப்பழத்தை, 2 இஞ்ச் நீளத்துக்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை, ஒவ்வொன்றாக மாவு கலவையில் நனைக்கவும். அந்தத் துண்டுகளை வாழை இலையில் வைத்து மெதுவாக மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

கோக்கோ ஐஸ்கிரீம் 

தேவையான பொருட்கள் பால் -- 1 லிட்டர் கோக்கோ -- 4 டீஸ்பூன் சாக்லேட் எசன்ஸ் -- 4 துளி சர்க்கரை -- 1/2 கிலோ செய்முறை பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும். அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும். 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும். பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

பால்கோவா 

தேவையான பொருட்கள் பால் - 1 லிட்டர் தயிர் - சிறிதளவு சக்கரை - 100 கிராம் நெய் - 5 தேக்கரண்டி முந்திரி - 5 கிராம் செய்யும் முறை வாய் அகண்ட இரும்பு வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். ஒரு கொதி வந்ததும் சிறிது தயிரை பாலில் விடவும். பால் பொங்கி வரும்போது ஒரு கரண்டி வைத்து பாலை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். அடியிலும், ஓரத்திலும் பால் கட்டிவிடக் கூடாது. கிளறிக் கொண்டே இருக்கவும். பால் சிறிது சுண்டி மஞ்சள் நிறத்திற்கு வரும்போது சர்க்கரையைத் தூவி கிளறி விடவும். முந்திரியை நெய்விட்டு பொறித்து அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, அந்த பொடியையும் பாலில் போட்டு கிளறி விடவும். சர்க்கரை பாலுடன் நன்கு சேர்ந்ததும் பால் சிறிது கெட்டியாகத் துவங்கும். அப்போது 3 தேக்கரண்டி நெய்யை பாலில் விடவும். 10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும். பால்கோவா சிறிது தளதளவென்று இருக்கும்போதே இறக்கிவிடவும். நெய் சேர்த்துள்ளதால் பின்பு இது இறுகும். எனவே தளதளவென்று இறக்கினால் பின்பு இறுகி கோவா பதமாக இருக்கும். தற்போது ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி அதில் சுடான பால்கோவாவை எடுத்து வைத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் வறுத்த முந்திரியை அதன் மீது பரப்பி அழகுபடுத்தலாம். 

சிக்கன் மஞ்சூரியன்(டிரை) 

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ ரெட் கலர் - 1 சிட்டிகை மைதாமாவு - 2 டீஸ்பூன் முட்டை - 1 சோளமாவு - 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 1 சிறியது குடமிளகாய் - 1 சிறியது வெங்காயத்தாள் -4 சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு+எண்ணெய் = தேவைக்கு செய்முறை : சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டுவிழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில்க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும், கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும். பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும். குறிப்பு: 1. விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்.

கச்சான் அல்வா 

தேவையான பொருட்கள்: கச்சான் முத்து 1/4 கிலோகிராம் சீனி 1/4 கிலோகிராம் மாஜரின் 2 தே.க அப்ப சோடா 2 சிட்டிகை கோதுமை மா 2 தே.க செய்முறை: 1. கச்சான் முத்தை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின்னர் கசக்கி புடைத்து பாதி முத்துக்களாக்கி கொள்க. 2. தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்க. 3. ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுத்துகொள்ளுங்கள். 4. சீனி முழுவதும் இளகி பாகாக வரும் போது , அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்க. 5. பின்பு சீனி பாகில் கச்சான் முத்தை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். 6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி துண்டுகளாக வெட்டியெடுக்கவும். 

ஜிலேபி 

தேவையான பொருட்கள்: மைதா - கால் லிட்டர் சீனி - முக்கால் லிட்டர் மஞ்சள் பொடி - 1 சிட்டிகை நெய் - அரை லிட்டர் தயிர் - 2 தேக்கரண்டி செய்முறை: முதல் நாள் இரவே மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் சீனியை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் நெய்யைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போல பிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment