கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்?1,? 2 பாதங்கள்?வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
மிதுனத்தில் வரும் குருவால் மிதமிஞ்சிய லாபம் வரும்!
வருமானம் பற்றியும், வருங்கால முன்னேற்றம் குறித்தும் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் ரிஷப ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு, பெருமைகளை எல்லாம் நமக்கு சேர்க்குமா? நிரந்தரமானவருமானத்தை தந்து நிம்மதியை கொடுக்குமா? என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் 2013 இனிய வாழ்வைஉங்களுக்கு வழங்கப் போகிறது.
காரணம் இந்த ஆண்டின் கூட்டுத் தொகை ‘6’ உங்கள் ராசி நாதன்சுக்ரனுக்குரிய எண்ணும் ‘6’ எனவே இரண்டும் இணைந்து செயல்படும் பொன்னானநேரமிது.
தொட்ட காரியங்கள் துலங்கும். கைபட்ட இடமெல்லாம் வளரும். வெற்றி தேவதைஉங்கள் வீட்டிற்கு வந்து குடியேறப் போகிறாள். கட்டளையிடும் பணியாளர்கள் ஒருபுறம், கார், வண்டி, பங்களாக்கள் ஒரு புறம். கொட்டி வைத்த செல்வக்குவியலோடு, குடும்பத்தை நடத்துகிற வாய்ப்பும், உருவாகும் வருடமிது.
பொதுவாகவே உங்களுக்கு இரக்க சிந்தனை உண்டு. உறக்கமும் உங்களுக்குஅதிகமாகவே இருக்கும். அரக்க பறக்க காரியம் செய்யாமல், பக்குவமாக காரியங்களைசெய்வதில் கைதேர்ந்தவர் நீங்கள். உரக்க பேச மாட்டீர்கள். ஆனால் உள்ளதைஎல்லாம் எடுத்துரைப்பீர்கள்.
உள்ளதை எல்லாம் உள்ளபடி சொல்வதால் தான் எல்லோரின் உள்ளத்திலும் நீங்கள்இடம் பிடிக்கீறீர்கள். காளை வாகனம் கொண்ட சின்னம் தான் உங்கள் ராசி.நீங்கள் ஆளை மயக்கும் விதத்தில் பேசுவீர்கள்.
இந்த புத்தாண்டில் நீங்கள் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டியநாட்கள். மார்ச் 2 முதல் மே 21 வரை. மீண்டும் ஆகஸ்டு 20 முதல் அக்டோபர் 8 வரை. இக்காலத்தில் செவ்வாய், சனியின் பார்வை இருப்பதால் வழிபாட்டில் கவனம்செலுத்தினால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.
உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள கட்டங்களையும், புத்தாண்டில் உள்ள கிரகநிலைகளின் கட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வருட பிறப்பு நாள்வரும், பெரிய கிரகங்களின் மாற்றங்கள் உருவாகும் நாள் ஆகிய நிகழ்வுகளின்போது நமது சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் செய்யும்காரியங்களில் சேரும் வெற்றி வாய்ப்பு. இல்லையேல் கையில் இருக்கும் பணம்அனைத்தும் கரைந்து விடும். கடவுள் வழிபாட்டினால் மீண்டும் பழைய நிலைஉருவாகும்.
2013–ம் அண்டு சுக்ரனுக்குரிய ஆண்டாக ஆறு எண் ஆதிக்கத்தில் அமைவதால், சுக்ர பலம் உங்கள் சுய ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. ராசிநாதன் சுக்ரன் இந்த ஆண்டிற்குரிய எண்ணின்கூட்டுத்தொகையாக அமைவது யோகம் தான்.
1.1.2013 முதல் 27.5.2013 வரை
வருட தொடக்கத்தில் குரு உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். சகாயஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரித்து ஆண்டு தொடங்குகிறது. எனவே நினைத்தகாரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய கிரகங்கள் சாதகமான நிலையில் உலாவருகின்றன. குரு வக்ரகதியில் இயங்குவதால் தான் உங்களுக்கு நற்பலன்கள்நடைபெறும்.
அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பூர்வ, புண்ணியத்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் அனைத்தும்கிடைக்கும். குறிப்பாக சொத்து தகராறுகள் அகலும். சொந்த பந்தங்கள் உங்கள்சொற்கேட்டு நடக்க முன்வருவர். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள்வெற்றி கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
திருமண பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான அறிகுறிகளும் தென்படும்.வாரிசுகள் வெளிநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஒத்துழைப்பு செய்வர்.இல்லற வாழ்வில் இருந்த இடையூறுகள் அகலும். நல்லவர்கள் என்று நீங்கள்நினைத்தவர்கள் நலம் வந்து சேர உங்களுக்கு வழி வகுப்பர்.
சந்திரனுக்கு 4–ல் சனியும், ராகுவும் இருப்பதால் குடும்பத்தில்குழப்பங்கள் சில சமயங்களில் ஏற்படலாம். பெரியவர்கள் சொல்வதை பிள்ளைகள்கேட்காமல் பிரச்சினைகளை உருவாக்கலாம். குரு பெயர்ச்சி ஆகும் வரை அதாவதுஜூன் மாதம் வரை கொஞ்சம் பொறுமையை கையாளுவது நல்லது.
6–ல் உச்சம் பெற்ற சனி உத்தி யோகம், தொழிலில் உள்ள இடையூறுகளைஅகற்றுவார். தேக்கநிலை மாறி ஆக்க நிலை உருவாகும். தேடிக்கொண்டிருந்த வேலைதிடீரென கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிகள், வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
இருப்பினும், ராகு– கேதுக்களின் ஆதிக்கம் 6, 12–ல்பின்னப்பட்டிருக்கிறது. 6–ல் உள்ள ராகு அஷ்டலட்சுமி யோகத்தை கொடுக்கும்.எனவே, பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விரயங்களும் அடுத்தடுத்துவந்து கொண்டே இருக்கும். எனவே முறையாக ராகு–கேதுக்களுக்கு பிரீதி செய்வதன்மூலம் பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெறவழிவகுத்துக் கொள்ளலாம்.
28.5.2013 முதல் 31.12.2013 வரை
இக்காலத்தில் மிதுனத்தில் குரு சஞ்சரிக்கப் போகிறார். அதன் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, நீண்ட நாள் நோயில் இருந்து நிவாரணம்பெறுவீர்கள். தூண்டுகோலாக இருந்தவர்கள் இப்போது துடிப்போடு செயல்பட்டுஉங்கள் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு கொடுப்பர்.
ஆண்டவனின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆண்டு கொண்டிருக்கும்அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். எனவே, வேண்டியகாரியங்களை நீங்கள் சாதித்துக் கொள்ள இயலும். வேற்றுமை பாராட்டாமல் நீங்கள்பழகுவதால் தான் போட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேறுகின்றன.
கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். இடமாற்றம் செய்வதற்காக எடுத்தமுயற்சிகளை இனி கைவிட்டு விடுவீர்கள். இங்கேயே நீடித்திருக்கலாம். அங்கேசென்றாலும் இனி அதே பிரச்சினை தானே வரும் என்று சொல்வீர்கள். நீடித்தநோயில் இருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.சென்ற வருடத்தில் சிக்கல்களில் இருந்த சில பிரச்சினைகள் இப்போது நல்லமுடிவிற்கு வரும்.
குருவின் வக்ர காலம்
குரு வக்ரம் பெறும் போதெல்லாம் நன்மைகளையே வழங்கும். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக குரு விளங்குகிறார். அஷ்டமாதிபதி வக்ரம்பெறும் போது, ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற பழமொழிப்படிதிட்டமிடாது செய்கிற காரியங்களில் வெற்றி கிடைக்கும். தித்திக்கும் செய்திதினந்தோறும் வந்து சேரும். வங்கி கடன் சுமை குறையும்.
வாங்கிய கடன் சுமை குறைந்தால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். நிலையானவருமானத்துக்கும் வழி பிறக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை மீண்டும் கைக்கு வந்து மகிழ்ச்சியை உருவாக்கும்.எதிர்காலத்துக்கான திட்டங்களை தீட்டி இதயம் மகிழ்வீர்கள்.
ஒன்பதாம் இடத்துக்கு அதிபதியாக குரு விளங்குவதால் வாகன பழுது அதிகரிக்கும். வாய்ப்புகள் கை நழுவாமல் இருக்க வியாழனின் வழிபாடு தேவை.
சனி– செவ்வாய் பார்க்கும் காலம்
ஒரு சில கிரகங்கள், ஒரு சில கிரகங்களை பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.ஒரு சில கிரகங்கள், ஒரு சில கிரகங்களை பார்த்தால் போராட்டங்கள் ஏற்படும்.பார்வை பலனால் அதிக பிரச்சினைகளை உருவாக்கும் சனியும், செவ்வாயும்பார்த்துக் கொள்ளும் நேரத்தில், நீங்கள் தொழிலில் கூடுதல்விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது.
ஏனென்றால் தொழில் ஸ்தானாதிபதி சனி, விரயாதிபதியாக விளங்குபவர் செவ்வாய்இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளும் போது, நடக்கும் தொழிலில் ஒன்றுகையை விட்டுப் போகலாம். இடம், பூமியால் பிரச்சினைகள் ஏற்படலாம். தடம்பிறழாதவராக இருந்தாலும் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அருகில் இருப்பவர்களிடம்அன்பும், ஆதரவும் காட்டினால் தான் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.
இக்காலத்தில் திசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை ஆராய்ந்துதேர்ந்தெடுத்து வார வழிபாடு, மாத வழிபாடு என்று பிரித்து பட்டியலிட்டுவழிபடுவது தான் நல்லது. அப்போது தான் துயரங்கள் துள்ளி ஓடும். சனியின் வக்ரகாலத்தில் யாரையும் நம்பி கடன் கொடுப்பது கூடாது. உறவினர் பகையும்உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத் தொடக்கத்தில் குடும்ப சுமைகூடும். கூட இருப்பவர்களை நம்பி செய்த காரியங்களால் பிரச்சினைகள்உருவாகலாம். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். ஜென்ம குருவின் ஆதிக்கம்முடியும் வரை குரு வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள்.
குரு பெயர்ச்சிக்கு பின்னால் கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெற்றோர் வழி பிரியம் அதிகரிக்கும்.பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.
கணவன், மனைவி இருவரும் பாசமழையில் நனைவர். சொத்துக்கள் உங்கள் பெயரில்வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும். என்ன இருந்தாலும் 6, 12–ல் சர்ப்பகிரகங்கள் இருப்பதால் முறையான சர்ப்ப சாந்திகளை செய்வது நல்லது.
No comments:
Post a Comment