Wednesday, January 9, 2013

ஊட்டியில் 2வது சீசன் இன்னும் களைகட்டவில்லை


ஊட்டி :ஊட்டியில் 2,வது சீசன், கடந்த 1,ம் தேதி மழையுடன் துவங்கியது. வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த சீசனில் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

7 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் அவை மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட உள்ளது.
படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, காட்டேரி பூங்கா, தேனிலவு படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

2,வது சீசன் நவம்பர் வரை நீடிக்கும். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவு இல்லாததால் சீசன் களைகட்டாமல் உள்ளது. இதனால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment