Wednesday, January 9, 2013

நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு



தென்காசி, : குற்றால சீசன் கிட்டத்தட்ட 60% கடந்துவிட்ட நிலையில் பெரும்பாலான நாட்கள் சாரல் இல்லாமல் ஏமாற்றிவிட்டது. தொடர்ந்து வெயிலடித்ததால் அருவிகளில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது. நேற்று காலை சற்று இதமான சூழல் நிலவியதுடன், மேற்கு தொடர்ச்சி மலையில் மேகக்கூட்டம் திரண்டு காணப்பட்டது. மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் பெய்ததால் மதியம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர்வரத்து சிறிது அதிகரித்தது.

மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் நன்றாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் நன்றாக தண்ணீர் கொட்டுகிறது. புலியருவி, பழையகுற்றால அருவியில் தண்ணீர் குறைவாக விழுகிறது. மெயினருவியில் கூட்டம் அலைமோதியதால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment