Wednesday, January 9, 2013

குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு





நெல்லை, : குற்றாலத்தில் நேற்று இதமான சூழல் காணப்பட்டதுடன் மதியம் சாரல் மழை நன்றாக பெய்ததால் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலையிலிருந்தே இதமான சூழல் நிலவியது. மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. மலை பகுதியிலும் சாரல் நீடித்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சிற்றருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஆடி மாதம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் ஓரளவு நன்றாக உள்ளது.
இதற்கிடையே அருவிப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் முழு நேரமும் தண்ணீரில் நனைந்தவாறே பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காவல்துறை சார்பில் அவர்களுக்கு மழைகோட்டுகள் வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளிக்க வந்த நீதிபதி ஒருவர் போலீ சாருக்கு தனது சொந்த செலவில் மழை கோட்டுகள் வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் பரந்து விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

No comments:

Post a Comment