Wednesday, January 9, 2013

ஆகாயகங்கை அருவியில் பயணிகள் குளிக்க தடை





சேந்தமங்கலம், :நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து ஆகாயகங்கை, மாசிலா அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆகாய கங்கை அருவியில் கடந்த 4 நாட்களுக்கு முன் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மாசிலா அருவியில் மட்டும் குளித்து விட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் காட்டாறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆகாயகங்கை அருவியில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஆகாயகங்கை பகுதியில் வனத்துறையினர் கயிறு கட்டி குளிக்க தடை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதனால் நேற்று கொல்லிமலை வந்த சுற்றுலா பயணிகள் ஆகாயகங்கையில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கொல்லி மலையில் பலத்த மழை காரணமாக அடிவாரம் காரவள்ளி பெரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

No comments:

Post a Comment