Wednesday, January 9, 2013

குற்றால அருவியில் குளிக்க அனுமதி





தென்காசி, :குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து 4 நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வடகிழக்கு பருவமழை தீவிரமைடந்ததால் கடந்த ஒரு வாரமாக குற்றாலஅருவிகளில் தண்ணீர் அதிகமாக விழுந்தது. மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நான்கு நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மழை சற்று ஓய்ந்து அருவியில் தண்ணீர் கட்டுக்குள் வந்ததால் நேற்று காலை 10 மணிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சீசன் நேரத்தில் ஏமாற்றிய மழை தற்போது வெளுத்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர் மழையின் காரணமாக சிற்றாற்றில் சுமார் மூன்று மாதத்திற்கு பிறகு தற்போது தண்ணீர் கரை புரண்டு செல்கிறது. இலஞ்சி குமாரர் கோயில் பகுதியில் நெற் கதிர்முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் மழையின் காரணமாக அவை தண்ணீரில் மூழ்கியுள்ளன 

No comments:

Post a Comment