Tuesday, January 8, 2013

பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது! அரசாங்கம்




தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு நடாத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அமர்வுகளின் மூலமே 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு தயார் எனவும், எனினும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளின் மூலமாக எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கி வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment