Wednesday, January 9, 2013

ஊட்டியில் கடும் குளிர்


ஊட்டி, :ஊட்டியில் கடும் குளிர் நிலவுகிறது. சுற்றுலா தலங்கள் வெறிச்சோடுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்துள்ளது. கடும் குளிர் நிலவி வருகிறது.

கமர்சியல் சாலையில் உள்ள கடைகளில் குளிர் ஸ்வெட்டர், குல்லா, ஜெர்கின் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நகரில் பெரும்பாலானோர் குல்லா, ஸ்வெட்டரில் சகிதமாக வலம் வருகின்றனர். ஊட்டியில் விரைவில் 2வது சீசன் துவங்க உள்ள நிலையில், குளிர் வாட்டியெடுப்பது வியாபாரிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

No comments:

Post a Comment