Wednesday, January 9, 2013

குற்றாலத்தில் சாரல் மழை


தென்காசி, : குற்றாலத்தில் சீசன் காலம் நிறைவடைந்த பிறகு குளு குளு சாரலுடன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏமாற்றி விட்டது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான 90 நாள் சீசனில் சுமார் 20 நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்தது. சில நாட்களில் கோடை காலத் தை மிஞ்சும் அளவிற்கு சுள் என்று வெயிலும் அடித்தது. இதனால், சீசனில் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது. சீசன் கால வர்த்தகமும் பெருமளவு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக குளு குளு சாரலுடன் அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டி வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் காணப்படவில்லை. வானம் மேகமூட்டமாகவே இருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சீசனில் பெரும்பாலான நாட்கள் வறண்ட நிலையில் காணப்பட்ட பழைய குற்றால அருவி, புலியருவிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. எனினும், சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே காணப்பட்டது.

No comments:

Post a Comment