Wednesday, January 9, 2013

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி, : குற்றாலத்தில் நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேரம் இடி யுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் கடும் வெள் ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மெயினருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று மதியத்திற்கு பிறகு மழை ஓய்வெடுத்துக் கொண்டது. இதைதொடர்ந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தது.

இதனையடுத்து மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும், சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment