பழங்காலத்தில் இருந்தே தமிழகத்தின் மேற்கு பகுதியாக விளங்குவதே கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது. புவியியல் ரீதியாக அப்போது கொங்கு நாடு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதற்கென தனி பெயர்கள் வழங்கப்பட்டது. மைசூர் அரசர்கள் ஆட்சிக்கு பின்னர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் 1790க்கு பின்னர் கைப்பற்றப்பட்டது. 1792ல் இருந்து 1800 வரை சேலம், கோவை பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு கீழ் வந்தது.
இங்கு வந்த ஆங்கிலேயர் பின்னாளில் நிலத்தை அளவிட்டு வகைப்படுத்தி நிலவரி வசூலிக்க தொடங்கினர். ஆங்கில ஆட்சியாளர்கள் தாமஸ் மன்ரோ, கர்னல் ரீடு ஆகியோர் தான் முதன் முதலில் இங்கு ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினர். ரயத்துவாரி வரிமுறை மூலம் நிலவரி மட்டும் அப்போதே ரூ.3 ஆயிரம் கொங்கு பகுதியில் கிடைத்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய பிரிட்டன் அரசாங்கத்தின் ஆட்சி 90 ஆண்டுக்கு மேல் நடந்தது. ஆனால் அப்போதும் மக்கள் வரி செலுத்தினர். நிலவரியாக மட்டும் அப்போது 7 லட்ச ரூபாய் வசூலானதாம். ஆனாலும் கொங்கு நாட்டு மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
நில வரியாக மட்டுமில்லாமல் முதல் உலகப்போரிலும் கொங்கு நாட்டு மக்களின் பங்களிப்பு மகத்தானதாகவே இருந்துள்ளது. முதல் உலகப்போரில் பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் நாடுகள் ஓரணியாக ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரியை எதிர்த்து சண்டையிட்டன. 1914ல் துவங்கி 1918 வரை நான்கு ஆண்டுகள் முதல் உலகப்போர் நடந்தது. அப்போது இந்தியாவின் பல பகுதிகளை ஆண்ட ஆங்கிலேயர்கள், முதல் உலகப்போருக்கு இந்தியர்கள் ஆதரவையும் திரட்டினர். ஆண்டது ஆங்கிலேயர்கள் என்ற போதிலும், பிரிட்டனுக்கு உதவிடும் வகையில் கொங்கு நாட்டு பகுதியில் மட்டும் அப்போது 10 லட்ச ரூபாய் போர் நிதி திரட்டி பிரிட்டனுக்கு தரப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இருந்து மட்டும் 14 ஆயிரம் இளைஞர்கள் பிரிட்டனின் ராணுவப்படையில் சேர்ந்து ஜெர்மனியை எதிர்த்து சண்டையிட்டுள்ளனர். ஆனால் போரில் வெற்றி பெற்ற பிரிட்டன் ராஜாங்கம், கொங்கு மக்களின் நலனை புறக்கணித்தனர். அப்போதும் கொங்கு பகுதியில் விவசாயமும், துணி நெசவும் தான் பிரதான தொழில்களாக இருந்துள்ளன. முதல் உலகப்போர் ஏற்படுத்திய உலகளவிலான பொருளாதார மந்த நிலை இங்கு நெசவு தொழிலை அடியோடு பாதித்துள்ளது. இதில் கோவை, ஈரோடு, திருச்செங்கோடு பகுதிகளில் மட்டும் 7 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த பாதிப்பில் இருந்து மீண்டு படிப்படியாக இந்த பகுதிகள் முன்னேறின.
முதல் உலகப்போருக்கு பின்னர் நெசவு ஆலைகளை மட்டும் ஆங்கிலேயர்கள் துவக்கினர். இரண்டாம் உலகப்போரின் போதும் இந்த பகுதியில் ஒரு தரப்பு மக்களின் ஆதரவை பெற்று 23 லட்ச ரூபாய் போர் நிதியாக வசூலித்தார்களாம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஒருபுறம் உள்நாட்டில் சண்டை போட்டாலும்; அப்போது ஹிட்லரிடம் நாடு சிக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

No comments:
Post a Comment