வளம் தரும் வாஸ்து
இதுவரை நான்கு திசைகள் நமக்குப் பலனளித்த விதங்களையும் அதனின்று முரண்பட்டால், கட்டிடமாக அமைக்கும்போது எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் பார்த்தோம். தற்போது வீடு கட்டும்போது அந்த நிர்மாணத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்க்கலாம். காலி மனையை கருத்தில் கொண்டு வாஸ்து அம்சங்களை அலசிய நாம், அந்தப் பகுதியில் கட்டிடம் அல்லது வீடு அமைக்கும்போது அதே அம்சங்களை எப்படிப் பின்பற்றுவது என்பதையும் பார்க்கலாம். ஒரு மனை/நிலம் காலியாக இருந்து, வாங்கும்போது, முதலில் அதை பாதுகாக்க வேண்டும். அதாவது மனையை சுத்தம் செய்ய வேண்டும். (அது மலைப்பகுதியாக இருந்தால்கூட மரங்களை விட்டுவிட்டு, ஏனைய பகுதியை சுத்தமாக்க வேண்டும்.)
ஒரு விசேஷம், ஆராதனை, விழா என்றால் எப்படி நம்மை சுத்தப்படுத்தி, வீட்டையும் சுத்தப்படுத்தி அலங்கரிக்கின்றோமோ அது போலவே மனையையும் சுத்தியாக்க வேண்டும். மேடு பள்ளங்கள் இருந்தால் நிரவி சமன்படுத்த வேண்டும். மேல்நாட்டில் இதை முழுமையாக கடைபிடிக்கிறார்கள். நம்மவர்கள் அவ்வாறின்றி ஏனோதானோ என்றுதான் இவ்விஷயத்தில் நடந்து கொள்கிறோம். மண்தானே என்று அலட்சியப்படுத்துகிறோம். கிரகங்களிலேயே வலிமையான, பக்குவமடைந்த கிரகம் பூமி மட்டுமே. எனவே அதை மேலும் மெருகூட்ட வேண்டியது நம் கட்டாயப் பணியாகும்.
பிற கிரகங்களில் நீர், நெருப்பு, மனிதன் ஆகிய ஏதுமில்லை. ஆனால் இப்புண்ணிய பூமியிலே நாம் நினைக்கும் அனைத்து வாஸ்துக்களும் காணக் கிடக்கின்றன. இப்பேறுகள் உடைய பூமியை நாம் சுத்தமாக பேணி பாதுகாப்பது என்பது நம்மை நாமே அலங்கரித்துக் கொள்வதுபோலதானே! எனவே சுத்தப்படுத்தி சமன்படுத்தினால் பூமாதேவி மனம் குளிர்ந்து நன்மைகள் பல செய்ய வருவாள்! சுத்தம் செய்தோம். அலங்கரித்தோம். ஆடை அணிகலன் வேண்டாமா? அதுதான் நம் மனைக்கு நாம் கட்டும் சுற்றுச் சுவர். மனையின் தெற்கு-மேற்கில் உயரமாகவும் வடக்கு-கிழக்கில் சற்று தாழ்வாகவும் இந்தச் சுவரை அமைக்க வேண்டும்.
மனைக்கு அணுகு சாலையின் பக்கம் சுற்றுச்சுவரை கட்டாமல் முள் கம்பி வேலி அமைத்து, கட்டிடம் கட்டி முடித்தபின்பு அலங்கார காம்பவுண்ட் கட்டிக் கொள்வதிலும் தவறில்லை. கட்டு மனைப் பொருள்களை உள்ளே எடுத்துச் செல்வதும் போர் போட ரிக் போன்ற வாகனங்களை உள்ளே சென்று வரவும் இவ்வாறு முள் கம்பி வேலி அமைப்பது வசதியாக இருக்கும். இப்படி சுற்றுச் சுவர் கட்டியபின் எங்கே நுழைவு வாயில் அமைப்பது என்பதுதான் முக்கிய விஷயமே. படத்தில் உள்ளபடி கேட் அமைத்தால், அவை உச்ச ஸ்தானத்தில் அமைந்து கட்டிடப் பணியை துரிதமாக்கி விரைவில் கட்டிடத்தில் குடியேற வழிவகுக்கும்.
பாதுகாப்பு எனக் கருதி உடைந்த கண்ணாடிகளை சுற்றுச்சுவரில் பதிப்பதும், காம்பவுண்ட் சுவர்மீது இரும்புக் கம்பிகளை வைத்து உயரமாக்குவதும் நல்லதல்ல. இரும்புக் கம்பிகளை காம்பவுண்டில் வைத்தால் மழைக்காலங்களில் இவை ஆண்டனா போல் செயல்பட்டு இடி இடிக்கும்போது மின்சாரத்தை கடத்துகின்றன. எனவே, இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும். இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். கோயில்களில், கலசங்களை வைத்தார்கள். இது அழகு, சிற்ப சாஸ்திரம் என்று நினைக்கிறோம். அப்படியல்ல. தாமிரத்தால் ஆன கூர்முனையைக் கொண்ட கலசத்தை உச்சியில் வைத்து அதன் கீழே வரகு, சாமை, நவதானியங்களை இட்டு வைக்கும்போது அவை இடியை உள்வாங்கி அப்பகுதி மக்களை காப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பாகும். நம் முன்னோர்களின் அறிவை என்னவென்று போற்றுவது!
நம் இந்திய தேசத்தை தவிர ஏனைய எந்நாட்டிலும் இந்த அமைப்பை மக்கள் ஏற்படுத்தவில்லை. இயற்கை இடர்களைத் தாங்கும் வல்லமை குறித்த அறிவியலை அறிந்த நம் முன்னோர்களை வாழ்த்தி வணங்குவோம். இப்படிப்பட்ட கலசங்கள் ஆக்சிஜனேற்றம் காரணமாக அசுத்தம் அடைவதை சரி செய்யவே 12 வருடங்களுக்கு ஒருமுறை புனராவர்த்தனம் செய்து கலசங்களுக்கு புனித நீர் (கும்பாபிஷேகம்) தெளிப்பதையும் நாம் இன்று காண்கிறோம். ஆக, சுற்றுச்சுவர்களை முறையாக கட்டிப் பராமரிக்க வேண்டியது நம் முதற் கடமையாகும்.
1 முதல் 7 பிராகாரங்களை (சுற்றுச் சுவர்கள்) உடைய திருவண்ணாமலை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருக்கடவூர், ஸ்ரீரங்கம் போன்ற கோயில்கள் மிகப் பிரபலம் அடைய இந்த சுற்றுச் சுவர்களும் ஒரு காரணம். சுற்றுச் சுவரில் மழைநீர் வடிந்து பனி படர வாய்ப்பு உண்டு. எனவே மழைநீர் நன்றாக நிலத்தில் விழ வேண்டுமாயின், சுற்றுச்சுவரின் உச்சியில் விளிம்பு ஏற்படுத்தி கட்டினால் (கோயில் காம்பவுண்ட்டை கவனியுங்கள்) காம்பவுண்ட் சுவர் பலமாவதுடன் பொலிவாகவும் திகழும். சுற்றுச் சுவர் அமைக்கும்போது மனை சதுரமாகவோ, செவ்வகமாகவோ அல்லது நீட்டம் பெற்று இருந்தாலும் கீழே உள்ளவாறு கேட் அமைத்தால் மிகச் சிறப்பான பலனைத் தரும்.
இயல்பான மனையில் அமைந்த கேட் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு பார்த்தவாறு இருக்குமாறு அமைக்க வேண்டும். சில இடங்களில் மனை வளர்ந்திருக்கும். அப்படி வளரும் போது படம் 5ல் குறிப்பிட்டவாறு கேட் அமைத்தால் மட்டுமே, வாஸ்து அமைப்பு சரியாக இருக்கும். மனையே மூல மட்டத்திற்கு அதாவது 90 டிகிரிக்கு அமைத்து காம்பவுண்டை உள்வாங்கி அமைத்த பின்னர் கேட் வைக்கவும். அப்படி அமைக்கும்போது மட்டுமே அக்கேட் உச்ச ஸ்தானத்தை பார்க்கும். அப்படி இல்லாமல், இயல்பாக அமைக்கும்போது நீச்ச திசையை பார்த்து அவை கெடுபலன்களை அளிப்பவையாக மாறிவிடும்.
எனவே அமைக்கும் கேட் வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு பார்த்தவாறு அமைத்தால் மட்டுமே நற்பலன்களை வழங்கும்.
கேட்டில் கூரான அமைப்பை (பெரும்பாலான இடங்களில் அலங்காரத்திற்கும் பாதுகாப்பிற்கும் கூரானவை அமைக்கப்படுகின்றது) அமைக்கக்கூடாது.
வடக்கு, கிழக்கில் உள்ள கேட், ஜன்னல் போன்ற அமைப்பை வைத்துக் கொள்ளலாம். ஆனால் தெற்கு-மேற்கில் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே இருப்பது தெரியாதபடி இரும்பு ஷீட்டால் அடைத்துவிடுவது சிறந்த பலன்களைத் தரும். கேட்டின் உள்ளே இருந்து வெளியே இருப்பவரை பார்ப்பதற்கென சிறிய ஜன்னல் போன்ற அமைப்பை வடக்கு, கிழக்கு ஒட்டி அமைக்கவும்.
கேட் திறக்கும் முறை
இரண்டு கேட் இருக்கும்போது அதில் கிழக்கு, வடக்கில் உள்ளதை முதலில் திறந்தும் (இருச் சக்கர வாகன போக்குவரத்து, சாதாரண போக்குவரத்தும்) பிறகு மற்றதை திறக்கவும். விக்கெட் கேட் எனப்படும் சிறிய கேட் வைக்க வேண்டுமெனில் கண்டிப்பாக அறை பெரிய கேட்டிற்கு வடக்கு-கிழக்கிற்கு அருகில்தான் அமைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் உள் பிரதான கேட்டிற்கு எதிரே அமைக்கப்படுவது சரியல்ல. எனவே மனையின் சுற்றுச் சுவர், அதில் கேட் அமைய வேண்டிய முறையை அறிந்து செயல்பட, நற்பலன்களை பெற்று பெரும் புகழோடு திகழ முடியும்.

No comments:
Post a Comment